மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

விருதுநகர் அருகே அரசு மதுபான கடையை மாற்றக்கோரி கிராம மக்கள் மறியல் போராட்டம்

விருதுநகர் அருகே இடையூராக இருந்து வரும் அரசு மதுபான கடையை மாற்றக்கோரி கிராம பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் பொதுமக்களை சமரசம் செய்தனர்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:45 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே இடையூராக இருந்து வரும் அரசு மதுபான கடையை மாற்றக்கோரி கிராம பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் பொதுமக்களை சமரசம் செய்தனர்.

விருதுநகர் அருகே வெள்ளூர் கிராமம் உள்ளது. இங்கு பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆகியோர் நடமாடும் மத்திய பகுதியில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இக்கடைக்கு அருகில் உள்ள கிராமங்களில் இருந்து குடிப்பதற்காக பலர் வந்து செல்கின்றனர். அதிலும் இரவு நேரங்களில் மதுக்குடித்து விட்டு தகாத வார்த்தைகள் பேசியும், பெண்களை கேலி கிண்டலும் செய்து வருகின்றனர். இதனால் நாள்தோறும் தேவையில்லாத பிரச்னை ஏற்படுகிறது. மேலும், சாலையோரங்களிலும், கிராமத்திற்குள் பொதுமக்கள் நடமாடும் பகுதியிலும் மதுப்புட்டிகளை வீசுவதோடு, உடைத்து விட்டுச் செல்கின்றனர். இதுபோன்ற காரணங்களால் பெண்கள், மாணவ, மாணவிகள் மற்றும் குழந்தைகள் நடமாடும் போது காலில் குத்தி காயம் ஏற்படுகிறது.

அதனால், ஊருக்கு மத்தியில் உள்ள இக்கடையை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்திருந்தோம். இதுவரையில் மதுபானக் கடையை மாற்றுவதற்கான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காலையில் பணியாளர்களை கடையை திறக்க விடாமல் தடுத்தனர்.

அதோடு, கடையின் முன்பு அமர்ந்து உடனே மாற்றக் கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து தகவறிந்த டாஸ்மாக் உதவி மேலாளர் முத்துலட்சுமி, ஆமத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் அன்னப்பராஜ் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இக்கடை நடத்துவதால் ஏற்படும் தகராறு மற்றும் பிரச்னைகள் குறித்து பெண்கள் அதிகாரிகள் இடத்தில் எடுத்துரைத்தனர். இக்கடையை உடனே மாற்ற முடியாது என்றும், தேர்தல் முடிந்ததும் பிரச்னையில்லாத வேறு இடத்திற்கு கொண்டு செல்வதாகவும் அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன் பின் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.