மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

விருதுநகர் அருகே இருபிரிவினரிடையே முன்விரோதம் காரணமாக வீடுகள் மீது கல்வீச்சு: 2 பேர் படுகாயம்

விருதுநகர் அருகே இருபிரிவினரிடையே முன்விரோதம் காரணமாக திடீரென வீடுகள் மீது கல்வீசி தாக்கியதில் 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் தொடர்பாக 21பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:44 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே இருபிரிவினரிடையே முன்விரோதம் காரணமாக திடீரென வீடுகள் மீது கல்வீசி தாக்கியதில் 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் தொடர்பாக 21பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே உள்ளது குல்லூர்சந்தை கிராமம். இக்கிராமத்தில் சௌடாம்பிகை அம்மன் திருக்கோயிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதல் இருந்து வருகிறது. தற்போது, இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வருகிறது.இது தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக ஒரு பிரிவினரை சூலக்கரை காவல் நிலையத்திற்கு போலீஸார் அழைத்துச் சென்றார்களாம். அப்பிரிவினரைச் சேர்ந்தவர்களுக்கு தெரியவந்ததை அடுத்து காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர். அதையடுத்து, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 5 பேரையும் போலீஸார் விடுவித்தனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு குல்லூர்சந்தை சாலைப்பகுதியில் சார்பு ஆய்வாளர் பார்த்திபன் ரோந்து சென்றுள்ளார். அப்போது, சாலையில் தகராறு செய்ததாக கருப்பசாமி என்பவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தாராம். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது தரப்பைச் சேர்ந்தவர்கள், எதிர் தரப்பினர் தூண்டுதலின் பேரில் தான் கருப்பசாமியை அழைத்துச் சென்றுள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்தவர்கள் எதிர் தரப்பினரின் வீடுகளின் மீது கல் வீச்சி தாக்கியுள்ளனர். இதில், 4 வீடுகள் சேதமடைந்த நிலையில் சுசீலா மற்றும் ராமர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் பற்றி அறிந்த போலீஸார் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இது தொடர்பாக தேவாங்கர் மஹாஜன சங்க நிர்வாக சபையின் உறுப்பினர்  ராஜாமணி சூலக்கரை காவல் நிலைய போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் கற்களை வீசி வீடுகளை சேதப்படுத்தியதாக 21 பேர் மீது சூலக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் இரவு நேரத்தில் நடந்ததால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.