நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

காதலித்து திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு சாவு

விருதுநகர் அருகே மத்தியசேனையைச் சேர்ந்த வேல்முருகன்(27). அருப்புக்கோட்டை அருகே செம்பட்டியைச் சேர்ந்த மகரஜோதி(23). இவர் இருவரும்  கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:42 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண் குடும்பத் தகராறு காரணமாக வியாழக்கிழமை இரவு தூக்கிட்டு உயிரிழந்தார்.

விருதுநகர் அருகே மத்தியசேனையைச் சேர்ந்த வேல்முருகன்(27). அருப்புக்கோட்டை அருகே செம்பட்டியைச் சேர்ந்த மகரஜோதி(23). இவர் இருவரும்  கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து மத்தியசேனை பகுதியில் தனியாக குடும்பமும் நடத்தி வந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்ப தகாரறு ஏற்பட்டு வந்ததாம். இதேபோல், வியாழக்கிழமையும் இரவு கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த நிலையில் வீட்டிற்குள் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு உயிரிழந்தாராம்.

இது தொடர்பாக மகரஜோதியின் தந்தை ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வேல்முருகன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து இளம்பெண் உயிரிழந்தது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணம் ஆகி ஒன்றரை வருடங்களே ஆன நிலையில் உயிரிழந்ததால் கோட்டாட்சியர் விசாரணையும் நடைபெற இருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.