நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

விருதுநகர் மாவட்டத்தில் மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அதிகாரி நியமனம்

மக்களவை தேர்தலுக்கான நாள் விரைவில் தேர்தல் ஆணையத்தால் இவ்வார இறுதிக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்துள்ளனர். இதையடுத்து, தேர்தல் பணிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தயார்

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:33 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக ஆட்சியரின் தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மக்களவை தேர்தலுக்கான நாள் விரைவில் தேர்தல் ஆணையத்தால் இவ்வார இறுதிக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்துள்ளனர். இதையடுத்து, தேர்தல் பணிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அந்தந்த மாவட்ட நிர்வாகத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தற்போது, தேர்தல் சம்பந்தமான அனைத்து வேலைகளையும் அந்தந்த வட்டாட்சியர் நிலையிலான அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்கவும், தேர்தல் நடத்தவும் துணை ஆட்சியர் நிலையிலான அதிகாரிகளை ஆட்சியரின் நேர்முக உதவியாளராக நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அவ்வகையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் தேர்தல் நேர்முக உதவியாளராக பவானி சிஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.