ராஜபாளையம் அருகே பிளஸ்2 மாணவிக்கு நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தளவாய்புரம் அடுத்த அம்மையப்பாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் சுந்தர்ராஜ்(28). ராஜபாளையத்தில் லேப் டெக்னிசீயனாக வேலை


ராஜபாளையம் அருகே பிளஸ்2 மாணவிக்கு நடைபெற இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுப்பு நிறுத்தி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தளவாய்புரம் அடுத்த அம்மையப்பாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் சுந்தர்ராஜ்(28). ராஜபாளையத்தில் லேப் டெக்னிசீயனாக வேலை பார்த்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த உறவினரான மாரிமுத்து என்பவரின் மகள் (பெயர் மாற்றம்) மகேஸ்வரி(17). இப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் திங்கள்கிழமை நடத்துவதாக நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து இருவீட்டாரைச் சேர்ந்தவர்களின் உறவினர்களும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குவிந்திருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சிலர் பிளஸ்2 தேர்வு எழுதப்போகும் மாணவிக்கு திருமணம் நடத்தப் போவதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரனுக்கு ரகசிய தகவல் தெரிவித்தார்களாம்.
அதன் அடிப்படையில் உடனே மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் மற்றும் ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர்களுக்கு நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவிட்டார். இதையடுத்து உடனே சமூக நலத்துறை அலுவலர் பாண்டியம்மாள், ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் பாரதமாதா மற்றும் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லதா உள்ளிட்டோர் கிராமத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு இருவீட்டாரைச் சேர்ந்தவர்களை அழைத்து அரசு விதிமுறைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
அதனால் குறிப்பிட்ட வயது வந்தவுடன் திருமணத்தை நடத்திக் கொள்ளுங்கள் என்றும், அதற்கு முன்னதாக பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதை அடுத்து திருமணத்தை நிறுத்தினர். மேலும், பெற்றோர்களிடம் இருந்து திருமணம் நிறுத்தம் குறித்து எழுதி வாங்கிக் கொண்டு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...