நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

மதுபானக் கூடம் திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

விருதுநகர் அருகே சூலக்கரையில் தனியார் அனுமதியுடன் மனமகிழ் மன்றம் சார்பில் தனியார் மதுபானக் கூடம் திறக்கப்பட இருக்கிறது. இதற்கு இப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:14 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே மதுபானக் கூடம் திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

விருதுநகர் அருகே சூலக்கரையில் தனியார் அனுமதியுடன் மனமகிழ் மன்றம் சார்பில் தனியார் மதுபானக் கூடம் திறக்கப்பட இருக்கிறது. இதற்கு இப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக கட்டடம் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவைகள் உள்ளன. இக்குறிப்பிட்ட இடத்தில் அனுமதி பெற்ற மதுபானக் கூடம் திறக்க கூடாது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் கிராம மக்கள் ஆகியோர் பாதிக்கப்படும் சூழ்நிலை இருக்கிறது.

மேலும், குடிகாரர்களின் தொந்தரவு அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறி மதிமுக மாவட்ட துணைச் செயலாளர் லட்சுமணன் தலைமையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் திரளாக வந்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸார்கள் தடுத்து குறைகளை கேட்டறிந்தனர். பி்ன்னர் குறிப்பிட்டவர்களை கோரிக்கை மனு அளிக்க அனுப்பி வைத்தனர். ஏற்கனவே பொதுமக்கள் பஸ் ஏறும் இடத்தில் மதுபானக் கடையால் நாள்தோறும் தொந்தரவு இருந்தது. இதே பகுதியில் மறுபடியும்  தொடங்குவதால் நிம்மதியில்லாத நிலை ஏற்படும் என ஆட்சியரிடம் நேரில் தெரிவித்து மனு அளித்தனர். பின்னர் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.