பஸ்ஸில் இருந்து தவறி விழுந்து பொறியியல் கல்லூரி மாணவர் சாவு
விருதுநகர் அருகே பாண்டியன் நகரைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் அழகுபாண்டி(20). இவர் விருதுநகர்-சிவகாசி சாலையில் உள்ள ஸ்ரீவி்த்யா பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து


விருதுநகர் அருகே படியில் தொங்கிக் கொண்டு பயணம் மேற்கொண்ட பொறியியல் பட்டதாரி மாணவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.
விருதுநகர் அருகே பாண்டியன் நகரைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் அழகுபாண்டி(20). இவர் விருதுநகர்-சிவகாசி சாலையில் உள்ள ஸ்ரீவி்த்யா பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் வியாழக்கிழமையும் வழக்கம் போல் காலையில் பேருந்தில் கல்லூரிக்கு வந்துள்ளார். அதேபோல் மாலையில் கல்லூரி முடிந்து விருதுநகர் செல்லும் தனியார் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது, உள்ளே பயணிகள் கூட்டமாக இருந்ததால் படியில் தொங்கிக் கொண்டு சென்றார்களாம். கருப்பம்பட்டி கண்மாய் பகுதியில் தனியார் பட்டாசு டெப்போ அருகில் வரும் போது திடீரென கைபிடி நழுவி தவறி கீழே விழுந்தார்.
இதில், தலையில் பலத்த காயம் அடைந்த அழகுபாண்டியை உடன் வந்த மாணவர்கள் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவி சகிச்சைக்கு பின் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இது தொடர்பாக ஆமத்தூர் காவல் நிலையத்தில் மாணவரின் தந்தை கண்ணன் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து அம்மன்கோவில்பட்டி புதூரைச் சேர்ந்த தனியார் பேருந்தின் ஓட்டுநர் தங்கராஜ்(28) என்பவரை கைது செய்து விபத்து தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...