சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

விருதுநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று கரைப்பு

விருதுநக மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சிலைகளை இந்து முன்னணி மற்றும் பா.ஜ.கவினரால் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:38 am

எஸ். பாண்டியன்

விருதுநக மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சிலைகளை இந்து முன்னணி மற்றும் பா.ஜ.கவினரால் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஞாயிற்றுக்கிழமை மாலையில் நீர் நிலைகளில் கரைத்தனர்.

விருதுநகரில் இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க சார்பில் வெயிலுகந்தம்மன் திருக்கோயில் முன்புறம், தேசபந்து மைதானம், மேற்குத் தெரு, டி.டி.கே சாலை, மேற்குத் தெரு, அல்லம்பட்டி, பாண்டியன் நகர், முத்துராமன்பட்டி உள்ளிட்ட 53 இடங்களில் 2 அடி முதல் 12 அடி வரையில் பல்வேறு ரகங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. அதேபோல், சிவகாசி நகரம் மற்றும் ஒன்றிய பகுதியில் 59 சிலைகளும், அருப்புக்கோட்டையில் 35 சிலைகளும், ராஜபாளையத்தில் 42 சிலைகளும், சாத்தூரில் 44 சிலைகளும், திருச்சுழியில் 3 என மொத்தம் 277 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்து வந்தனர். இதற்கு நாள்தோறும் குத்துவிளக்கு பூஜை மற்றும் மூன்று கால சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டு வந்தது.

இதேபோல், விருதுநகரில் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகளுக்கு கடந்த மூன்று நாள்களாக சிறப்பு பூஜை செய்தனர். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை மாலையில் இந்து முன்னணி, பா.ஜ.க நிர்வாகிகள் முன்னிலையில் விநாயகர் சிலைகள் மேலதாளம் முழங்க டிராக்டர்களில் வைத்து ஊர்வலமாக தேசபந்து மைதானத்திற்கு கொண்டு வந்தனர். இங்கிருந்து, பாவாலி சாலை, பழைய பேருந்து நிலையம், மதுரை சாலை உள்ளிட்ட முக்கிய வழித்தடங்கள் வழியாக சிலைகளை கொண்டு சென்றனர். பின்னர் அப்பகுதியி்ல் மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட நீர் ஆதாரப் பகுதியான கல்கிடங்கில் ஒவ்வொரு விநாயகர் சிலைகளையும் கரைத்தனர்.

இந்த ஊர்வலத்தை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் விருதுநகர் துணைக்காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் உள்ளிட்ட போலீஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.