விருதுநகரில் பயணிடம் பிக்பாக்கெட் அடித்த இளைஞர் கைது
விருதுநகர் அருகே மலைப்பட்டியைச் சேர்ந்தவர் வீரபத்திரன்(39). இவர் ஞாயிற்றுக்கிழமை காலையில் மலைப்பட்டியிலிருந்து விருதுநகருக்கு செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது,


விருதுநகரில் ஓடும் அரசு பேருந்தில் பயணிடம் ரூ.300 பிக்பாக்கெட் அடித்த இளைஞரை கையும், களவுமாக பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
விருதுநகர் அருகே மலைப்பட்டியைச் சேர்ந்தவர் வீரபத்திரன்(39). இவர் ஞாயிற்றுக்கிழமை காலையில் மலைப்பட்டியிலிருந்து விருதுநகருக்கு செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது, முகூர்த்த நாள் என்பதால் பேருந்தில் கூட்டமாக அதிகமாக இருந்துள்ளது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய மர்ம நபர் ஒருவர் பாத்திமா நகருக்கும்-பழைய பேருந்து நிலையத்திற்கும் இடையே சென்று கொண்டிருக்கும் போது வீரபத்திரன் பையில் நைசாக கைவிட்டு சட்டைப்பையில் இருந்த ரூ.300ஐ எடுத்தாராம்.
உடனே சுதாரித்துக் கொண்ட வீரபத்திரன், அந்த இளைஞரை கையும் களவுமாக பிடித்து விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தார். பின் போலீஸார் விசாரணையில் மதுரையைச் சேர்ந்த சசிக்குமார்(28) என்ற விவரம் தெரியவந்தது. இது குறித்து போலீஸார் சசிக்குமார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...