சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

விருதுநகர் நகராட்சியில் 3 வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு இடைத்தேர்தல்: வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்

விருதுநகர் நகராட்சியில் காலியாக உள்ள 3 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் வியாழக்கிழமை தொடங்கி, தொடர்ந்து செப்-4ம் தேதி வரையில் நடைபெற இருப்பதாக

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:37 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் நகராட்சியில் காலியாக உள்ள 3 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் வியாழக்கிழமை தொடங்கி, தொடர்ந்து செப்-4ம் தேதி வரையில் நடைபெற இருப்பதாக நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) மணி தெரிவித்தார்.

விருதுநகர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இதில், தற்போது 10-வது வார்டு ஆரிப் அலி(திமுக), 21-வது வார்டு உறுப்பினர் தங்கப்பாண்டியம்மாள்(அதிமுக), 34-வது வார்டு விவேக்ராஜன்(சுயே) ஆகியோர் காலமானார்கள். அதனால் கடந்த ஓராண்டுக்கும் மேல் உறுப்பினர் பதவி காலியாக இருந்து வருகிறது. இதனால், அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாமலும் மற்றும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதிலும் சிரமம் இருந்து வந்தது. இதையடுத்து, தற்போது உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தலை நடத்துவதற்கு தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான வேட்பு மனுத்தாக்கல் இம்மாதம் 28-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து செப்-4ம் தேதி வரையில் நடைபெறுகிறது. அதன் பின் வருகிற செப்-5ம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனையும், செப்.8ம் தேதி தேதி வேட்பு மனுக்கள் மாலை 3 மணி வரையில்  வாபஸ் பெறவும், அதே நாளில் இறுதிப்பட்டியலும் வெளியிடப்பட இருக்கிறது.

இதையடுத்து, வருகிற செப்-18ம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவும், செப்-22ம் தேதி வாக்குகள் எண்ணிக்கையும் நடைபெற இருக்கிறது. மேலும், இத்தேர்தல் தொடர்பாக வேட்பு மனுத்தாக்கல் மற்றும் விவரங்கள் தகவல் பலகையில் வெளியிட்டுள்ளதாகவும் அல்லது நகராட்சி அலுவலக நேரத்தில் அலுவலர்களிடமும் கேட்டறிந்து கொள்ளலாம் எனவும் நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.