சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

கருந்திரி கட்டுக்களை அனுமதியின்றி தயாரித்ததாக 2 பேர் கைது

விருதுநகர் அருகே ஒண்டிப்புநாயக்கனூர் கண்மாய்பட்டி பகுதியில் வீட்டில் அனுமதியின்றி கருந்திரிகளை அனுமதியின்றி தயாரித்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ஆமத்தூர்

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:37 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே கருந்திரிகளை வீட்டில் அனுமதியின்றி தயாரித்தவரையும், மோட்டார் சைக்கிளில் கடத்தியதாகவும் என இரண்டு பேரை ஆமத்தூர் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

விருதுநகர் அருகே ஒண்டிப்புநாயக்கனூர் கண்மாய்பட்டி பகுதியில் வீட்டில் அனுமதியின்றி கருந்திரிகளை அனுமதியின்றி தயாரித்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ஆமத்தூர் காவல் நிலைய போலீஸார் மேற்குறிப்பிட்ட பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, சசிகுமார்(32) என்பவரின் வீட்டில் சோதனையிடும் போது கருந்திரி கட்டுக்கள் மற்றும் வெள்ளைத்திரி கட்டுக்களையும் தயாரித்து வைத்திருந்தது தெரியவந்தது. உடனே இது தொடர்பாக வழக்கு பதிந்து சசிகுமாரை கைது செய்ததோடு, அங்கிருந்த 1530 கருந்திரி கட்டுக்களையும், 213 வெள்ளைத்திரி கட்டுக்களையும் பறிமுதல் செய்தனர்.

மற்றொரு சம்பவம்: சங்கரலிங்காபுரம்-முதலிபட்டி சாலையில் ஆமத்தூர் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், சாக்கு பையில் 237  கருந்திரி கட்டுக்கள் இருந்தது. உடனே இது தொடர்பாக விசாரணை செய்ததில் முதலிபட்டி அருகே உள்ள தியாகராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம்(37) என்பதும், கருந்திரிகளை தயார் செய்து வெள்ளைத்திரி ஒட்டுவதற்காக கொண்டு செல்வதாகவும் தகவல் தெரியவந்தது. உடனே ஆறுமுகம் மீது ஆமத்தூர் போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த கருந்திரி கட்டுக்களையும் பறிமுதல் செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.