சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தாற்காலிக கணக்காளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் வட்டார வள மையங்களில் தாற்காலிக கணக்காளர் பணியிடங்களுக்கு பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன்

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:31 am

எஸ். பாண்டியன்

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் வட்டார வள மையங்களில் தாற்காலிக கணக்காளர் பணியிடங்களுக்கு பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

விருதுநகர் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் செயல்படும் வட்டார வளமையங்களில் கணக்காளர் பணியிடங்கள் தாற்காலிகமாக நிரப்பப்பட இருக்கிறது. இப்பணிக்கு பி.காம் பட்டப்படிப்புடன், கணிப்பொறி(Tally) முடித்து தகுதிச் சான்று பெற்றிக்க வேண்டும். அதோடு, 1.8.2014 அன்று 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.இதற்கான விண்ணப்பம் அனைவருக்கும் கல்வி இயக்கம் மாவட்ட திட்ட அலுவலக வளாகத்தில் தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. அதை பிரதி எடுத்து பூர்த்தி செய்து அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வரும் செப்-1ம் தேதி மாலை 5.45 மணிக்குள் நேரடியாக அளிக்க வேண்டும்.

இப்பணிக்கு விண்ணப்பம் செய்தவர்களில் தகுதியானவர்கள் மட்டுமே ஆக.13-ம் தேதி நடைபெற இருக்கிற எழுத்துத் தேர்வுக்கு கடிதம் மூலம் அழைக்கப்படுவார்கள். இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு அந்தந்த வட்டார வளமையம் மூலம் மாதந்தோறும் நிலையான பயணப்படி உள்பட மாதந்தோறும் ரூ.9900 மட்டும் தொகுப்பூதியமாக வழங்கப்படும். எனவே இப்பணிக்கு தகுதியான பட்டதாரி இளைஞர்கள் குறிப்பிட்ட நாள்களுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.