சாத்தூர் அருகே இருக்கன்குடியில் மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடிவெள்ளிக்கிழமை திருவிழாவும் தென்மாவட்ட அளவில் பிரசித்தி பெற்றது ஆகும். இத்திருவிழா வியாழக்கிழமை இரவு தொடங்கி, சனிக்கிழமை வரையில் நடைபெற இருக்கிறது. இதன் உச்சக்கட்ட திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இந்த விழாவை முன்னிட்டு மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து டிராக்டர், மாட்டு வண்டிகள், லாரி மற்றும் வேன் போன்ற வாகனங்களில் கூட்டம், கூட்டமாக வழிபாடு செய்து மாரியம்மனின் தரிசனம் பெறுவதற்காக வருவர். அதனால் இக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.