தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

கன்னியாகுமரி அருகே கவுன்சிலர் தீக்குளிப்பு முயற்சி: கைது செய்ய மக்கள் எதிர்ப்பதால் பரபரப்பு

கன்னியாகுமரி மாவட்டம் குளப்புரம் ஊராட்சியில் இன்று காலை கிராம சபைக் கூட்டம் ஊராட்சித் தலைவர்

Updated On :26 ஜனவரி 2013, 6:15 am

கன்னியாகுமரி மாவட்டம் குளப்புரம் ஊராட்சியில் இன்று காலை கிராம சபைக் கூட்டம் ஊராட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போது, 6வது வார்டு உறுப்பினர் எம்.சஜீவன், அந்தப் பகுதியில் அனுமதி இன்றி செயல்பட்டு வரும் கறிக்கோழிக் கடையை அகற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினார். இது தொடர்பாக பல புகார்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்றும், ஆட்சியர் அதனை அகற்ற உத்தரவு இட்டும் அது நடைமுறைப்படுத்தப் படவில்லை என்றும் கூறி, திடீரென்று தீக்குளிக்க முயன்றார்.

இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது. இதனை அறிந்த போலீஸார், சஜீவனைக் கைது செய்து காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், காவல் துறையினர் வந்த வாகனத்தை வழிமறித்த பொதுமக்கள், அவரை கைது செய்யக் கூடாது என்றும், உயரதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கூறினர். பொதுமக்களின் மறியலால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.