ஈரோட்டில் ஜன.6-ல் பல்கலை. ஆசிரியர் சங்கத்தின் மாநில மாநாடு: 3 அமைச்சர்கள் பங்கேற்பு
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் (ஏ.யு.டி.) மாநில மாநாடு ஈரோடு மல்லிகை அரங்கில் ஜன.6-ம் தேதி நடைபெறுகிறது.


பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் (ஏ.யு.டி.) மாநில மாநாடு ஈரோடு மல்லிகை அரங்கில் ஜன.6-ம் தேதி நடைபெறுகிறது.
இது குறித்து இச்சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலர் சி.பிச்சாண்டி செய்தியாளர்களிடம் பேசியவை...
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் 65-ம் ஆண்டு கல்வி மாநாடு, இந்திய பல்கலை ஆசிரியர் சங்கத்தின் கூட்டமைப்பின் பொன்விழா ஆகியவை ஈரோட்டில் ஜன.6-ம் தேதி காலை 9 மணி அளவில் நடைபெறுகிறது.
இம்மாநாட்டை தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் தொடங்கிவைக்கிறார். மாநாட்டு மலரை, பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் வெளியிட்டு சிறப்புரை ஆற்றுகிறார். வருவாய்த் துறை அமைச்சர் தோப்பு. என்.டி.வெங்கடாச்சலம் வாழ்த்துரை வழங்குகிறார்.
“உயர்கல்வியின் அடையாளம் இழப்பு; சிக்கலும், தீர்வு” என்ற தலைப்பில் இம்மாநாட்டில் கல்வியாளர்கள் சிறப்புரையாற்றுகின்றனர். இன்றைய உயர்கல்வி சூழலின் உண்மை நிலையை வெளிகொண்டு வருவதே இம்மாநாட்டின் முக்கிய நோக்கம்.
‘அடையாளம் இழப்பு’ என்பது அனைத்துத் துறைகளை சுற்றிலும் பரவி இருந்தாலும், இந்த புற்றுநோய் கல்விச் சாலைகளை கடைச்சரக்காகவும், சந்தைப்பொருளாகவும் வெகுவேகமாக மாற்றிக் கொண்டு இருப்பதால் சமுதாயத்திலே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
மத்திய, மாநில கல்விக் கொள்கை, ஏழை, நடுத்த தர மாணவர்களை அப்புறப்படுத்தி, கல்வியை அவர்களுக்கு எட்டாக் கனியாக்கும் ஜனநாயக சமுதாய வீழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதை தவிர்க்கும் வகையில் அனைவருக்கும் கல்வி சென்று சேர்ந்திட இம்மாநாடு வலியுறுத்தும்.
பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளின் சுமார் 500 பேராசிரியர்கள் இம்மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். இம்மாநாட்டில் ஈரோடு மேயர் ப.மல்லிகா பரமசிவம், துணை மேயர் கே.சி.பழனிசாமி உள்ளிட்டோரும் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.
மாநாட்டின் முதல் அமர்வில் பேராசிரியர் எஸ்.ராமமூர்த்தி மாநட்டின் பொருள் குறித்த கட்டுரையை சமர்ப்பிக்கிறார். இதைத் தொடர்ந்து, துணைவேந்தர்கள் முனைவர் ஜி.ஜேம்ஸ் பிச்சை (பாரதியார் பல்கலை.) முனைவர் கே.முத்துச்செழியன் (பெரியார் பல்கலை.), முனைவர் கே.ராமசாமி (வேளாண் பல்கலை. ஆகியோர் இம்மாநாட்டின் பொருள் குறித்து விரிவாக உரையாற்றுகின்றனர்.
இந்திய பல்கலை. ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலர் பேராசிரியர் அசோக்குமார் பர்மன், ‘ஆசிரியர் சங்கங்களின் பொறுப்பு’ என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். மாலை நடைபெறும் நிறைவு விழாவில் திருவள்ளுவர் பல்கலை. துணைவேந்தர் முனைவர் பி.குணசேகரன் உரையாற்றுகிறார் என்றார். பேட்டியின்போது பல்கலை. ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் முனைவர் எஸ்.பன்னீர்செல்வம், முன்னாள் தலைவர் பேராசிரியர் என்.செந்தாமரை, மண்டலத் தலைவர் என்.பசுபதி ஆகியோர் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...