கரூரில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக டாக்டர் தம்பதிகளின் மகன் உள்பட 3 பேரை போலீஸார் தேடிவருகின்றனர்.
கரூர் மாவட்டம் திருக்காம்புலியூரை சேர்ந்தவர் உதயசூரியன். இவரது மகன் கோபிநாத்(30). இவர் இனாம்கரூர் திமுக இளைஞரணி துணை செயலாளராக இருந்தார். இவரது அத்தை மகன் பிரவீன். இவருக்கும் கரூர் டவுன் பகுதியில் மருத்துவமனை நடத்தி வரும் டாக்டர்கள் பொன்னையன்-கவுசல்யா தம்பதியினரின் மகன் குருபிரசாத்(35) ஆகியோருக்கும் இடையே கடந்த மாதம் திருவள்ளுவர் மைதானத்தில் கூடைப்பந்து விளையாடச் சென்ற போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர்களுக்கிடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் கரூர் மக்கள்பாதை லைட்ஹவுஸ் கார்னர் அருகே பிரவீன் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த குருபிரசாத் பிரவீனிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர்.இந்நிலையில் ஏற்காடு இடைத்தேர்தலுக்குச் சென்றிருந்த கோபிநாத் ஞாயிற்றுக்கிழமை திருக்காம்புலியூர் வந்துள்ளார். அப்போது அவரிடம் பிரவீன் சென்று, அடிக்கடி குருபிரசாத் தன்னிடம் தகராறு செய்வதாக கூறியுள்ளார். இதையடுத்து அவர் நள்ளிரவு 2 மணியளவில் மக்கள்பாதையில் குருபிரசாத் தனது நண்பர்களுடன் நிற்பதாக கோபிநாத்துக்கு தகவல் கிடைத்தது. இ
இதனை தொடர்ந்து அவர் அங்குச்சென்று, தனது அத்தை மகனிடம் ஏன் அடிக்கடி தகராறு செய்கிறாய் என குருபிரசாத்திடம் கோபிநாத் கேட்டுள்ளார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த குருபிரசாத், அவனது நண்பர்கள் நீலிமேட்டை சேர்ந்த சந்தோஷ்குமார், வஉசி தெருவைச் சேர்ந்த காளி ஆகியோர் அரிவாளால் கோபிநாத்தை வெட்டினர். இதில் சம்பவ இடத்திலே கோபிநாத் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் நகர காவல் நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து குருபிரசாத் உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் விளையாட கிரிக்கெட் ஆஸ்திரேலியா அனுமதி..! எப்போது வருவார்?

சென்னையில் 1 மணி வரை 54.58% வாக்குப்பதிவு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 1 மணி நிலவரம்! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 41.11% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

