டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

விருதுநகர் அருகே பதுக்கி வைத்திருந்த ரூ.9.60 லட்சம் மதிப்பிலான 120 பான்பராக் மூடைகள் பறிமுதல்

விருதுநகர் அருகே தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 120  பான்பராக் மூடைகளை போலீஸார் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் உள்ளிட்டோர் பறிமுதல் செய்தனர். அதோடு, அந்த குடோனுக்கு சீல்

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:08 pm

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 120  பான்பராக் மூடைகளை போலீஸார் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் உள்ளிட்டோர் பறிமுதல் செய்தனர். அதோடு, அந்த குடோனுக்கு சீல் வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டியில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான குடோன் உள்ளது. தற்போது, இக்குடோனை மாதவன் என்பவர் வாடகைக்கு எடுத்து பல்வேறு பொருள்களின் வைப்பறையாக பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் அதிகாலையில் வச்சக்காரப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் தர்மர் மற்றும் சார்பு ஆய்வாளர் வாகன தனி்க்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 4 வழிச்சாலையோரத்தில் உள்ள் குறுகலான சந்துப்பகுதியில் வாகனத்தில் இருந்து இறக்கப்பட்ட மூட்டைகளை குடோனில் தூக்கி வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது, போலீஸார் வருவதை பார்த்ததும் 2 பேர் தப்பியோடியும், மற்றொருவர் குடோனை மூடுவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தாராம்.

உடனே அவரை பிடித்து விசாரணை செய்ததில் மாதவன் என்பவருக்குச் சொந்தமான குடோன் என்று கூறியுள்ளனர். உள்ளே திறந்து பார்க்கையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களான பான்பராக் மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. அதையடுத்து , இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கவிக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து விரைந்து வந்து குடோனில் இருந்து பொருள்களை பார்வையிட்டார்.

பின்னர் இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கவிக்குமார் கூறுகையில், அரசால் தடைவிதிக்கப்பட்ட 120 பான்பராக் மூடைகள் இருந்தது.  இதில், இரண்டு மூடைகளில் புகையிலை கலந்து நிகோடின் உள்ளது எனவும், மற்ற மூடைகளில் நிகோடின் என்ற இல்லாததது எனவும் மூட்டையின் மேல் ஒட்டப்பட்டிருந்த லேபிளில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால், பான்பராக் மூடைகளின் மாதிரிகளை சேகரித்து பாளையங்கோட்டையில் உள்ள உணவு பகுப்பாய்வு மையத்திற்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு வழங்கப்படும் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் மாதவன் மீது நடவடிக்கையும், பொருள்களை அழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது முதல் கட்டமாக குடோனுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், மொத்தம் 700 கிலோ மதிப்புடையை பான்பாரக் மூடைகளின் மதிப்பு சுமார் ரூ.9.60 லட்சம் வரையில் இருக்கும் எனவும் தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.