அதிமுக-திமுகவுக்கு மாற்று அரசியலின் நுழைவு வாயிலாக விருதுநகரில் செப்-15ம் தேதி நடைபெற இருக்கிற மதிமுக மாநாடு அமையும் என அதன் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
விருதுநகரை அடுத்த சூலக்கரை பகுதியில் தனியார் நூற்பாலை அருகே கரிசல்காட்டு பகுதியில் அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்று அடிக்கல் நாட்டினார். பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காமராஜர் பிறந்த பூமியில் அண்ணா பிறந்த நாள் விழா மாநில மாநாடு வருகிற செப்-15ம் தேதி நடைபெற இருக்கிறது.
இம்மாநாட்டில் மாநில அளவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மதிமுகவினர் லட்சக்கணக்கானோர் பங்கேற்க இருக்கிறார்கள். அதோடு, இந்த மாநாடு கழக உயர்நிலைக் குழு உறுப்பினரான ஜெபராஜ் தலைமையில் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளை விருதுநகர் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் கவனித்து வருகிறார். இதற்கான பணிகளை கடந்த 1-ம் தேதியே தொடங்க இருந்த நிலையில், மாநாட்டிற்கான அனுமதி கடந்த 3-ம் தேதிதான் மாவட்ட காவல் துறை வழங்கியது.
மேலும், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமலும், நெரிசலை ஏற்படுத்தாத வகையிலும் 4 வழிச்சாலையில் இருந்து 1000 அடி தள்ளியே மாநாட்டிற்கு பந்தல் உள்ளிட்டவைகள் அமைக்கும் பணிகள் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மதிமுகவின் வெற்றிக்கும், அதிமுக-திமுகவிற்கும் மாற்று அரசியலுக்கான நுழைவு வாயிலாக இம்மாநாடு அமையும். மேலும், இதில் அனைத்து மக்களின் வாழ்வாதரங்களை பாதுகாக்கும் வகையில் சுற்றுச்சூழல், முல்லைப்பெரியாறு, நதிகளை இணைக்கவும், நீர் ஆதாரங்களை பாதுகாக்கவும் உள்ளிட்ட பல்வேறு சிறப்புத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது. மேலும், வருகிற மக்களவை தேர்தலில் மதிமுக போட்டியிடும் தொகுதிகளில் விருதுநகரும் ஒன்றாக இருக்கும் என பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
அப்போது உடன் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், முன்னாள் மக்களவை உறுப்பினர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வரதராஜன், ஞானதாஸ் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பழங்கனாங்குடியில் ரூ.1.50 கோடியில் புதிய பாலம் கட்ட அடிக்கல்

வெள்ளை யானை வாகனத்தில் இரணியம்மன்
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

