சேலம், ஜூன் 24: சேலத்தில் இன்று நடைபெற்ற சீருடைப் பணியாளர் எழுத்துத் தேர்வில் 13 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இரண்டாம் நிலைக் காவலர், தீயணைப்பு-மீட்புப் பணி வீரர், சிறைக் காவலர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு மாநிலம் முழுவதும் நடைபெற்றது.
சேலத்தில் வைஸ்யா கல்லூரி, ஏ.வி.எஸ். கல்லூரி, சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி, ஜெய்ராஜ், கணேஷ் கலை, அறிவியல் கல்லூரி, சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி, செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளி ஆகிய 7 மையங்களில் தேர்வுகள் நடைபெற்றன.
இந்தத் தேர்வு 80 நிமிடங்கள் நடைபெற்றன. 80 வினாக்களுக்கு தேர்வர்கள் பதில் அளித்தனர். இந்தத் தேர்வுகளை எழுத 12,358 ஆண்கள், 1,381 பெண்கள் விண்ணப்பித்திருந்தனர். சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி மட்டும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்வு மையங்களுக்கு 20 நபர்களுக்கு ஒரு காவலர் என்ற வீதத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் விளையாட கிரிக்கெட் ஆஸ்திரேலியா அனுமதி..! எப்போது வருவார்?

சென்னையில் 1 மணி வரை 54.58% வாக்குப்பதிவு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 1 மணி நிலவரம்! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 41.11% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

