மணிப்பூர் காவல் துறையின் புதிய டிஜிபியான முகேஷ் சிங் ஜூன் 1-ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.
மணிப்பூர் காவல் துறையின் புதிய டிஜிபி-யாக நியமிக்கப்பட்டுள்ள முகேஷ் சிங் சனிக்கிழமை மணிப்பூர் தலைநகர் இம்பால் வந்தடைந்தார். அவர், ஜூன் 1-ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புது தில்லியிலிருந்து வந்திறங்கிய சிங்கை, இம்பால் விமான நிலையத்தில் மூத்த காவல் துறை அதிகாரிகள் வரவேற்றனர். 1996-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான முகேஷ் சிங், இதற்கு முன்பு லடாக்கின் காவல் துறைத் தலைவராகப் பணியாற்றி உள்ளார்.
ஏற்கெனவே டிஜிபியாக இருக்கும் ராஜீவ் சிங்கின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத்தொடர்ந்து புதிய டிஜிபி நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் ராஜீவ் சிங் புது தில்லியில் உள்ள அமைச்சரவை செயலகத்தில் பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்ற மத்திய அரசால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Summary
Newly appointed Manipur Police DGP Mukesh Singh arrived in Imphal on Saturday afternoon and will take charge from June 1, officials said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











