17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!

தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!

News image

பள்ளிகள் திறப்பு

Updated On :26 மே 2026, 5:27 pm IST

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் 2026-27 கல்வியாண்டில் நான்காம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை வரும் ஜூன் 1-ஆம் தேதியும், ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை ஜூன் 4-ஆம் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை முன்னதாக அறிவித்திருந்தது.

இதைத் தொடா்ந்து, நிா்வாக வசதியை உறுதி செய்வதற்கும், வெவ்வேறு வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் எதிா்கொள்ளும் சிரமங்களைத் தவிா்ப்பதற்கும், அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே மாதிரியான திறப்புத் தேதியைக் கோரி பெற்றோா், ஆசிரியா்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகளும் முறையீடுகளும் பெறப்பட்டன.

மேலும், ஜூன் முதல் வாரத்தில் நிலவும் வானிலை நிலவரங்களும் முன்னறிவிப்புகளும், மாநிலத்தின் பல பகுதிகளில் பருவமழைக்கு முந்தைய செயல்பாடு, விட்டுவிட்டுப் பெய்யும் மழை, ஈரப்பதம் மற்றும் அதனுடன் தொடா்புடைய வெப்பம் ஆகியவை தொடர வாய்ப்புள்ளது என்பதைக் காட்டுகின்றன. பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னா், சுகாதாரம், குடிநீா் வசதிகள், போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் ஒட்டுமொத்த வளாகத் தயாா்நிலை தொடா்பான பள்ளிகளின் ஆயத்த தேவைகளையும் தமிழக அரசு ஆய்வு செய்துள்ளது.

இந்த அனைத்து விஷயங்களையும் கவனமாகப் பரிசீலித்த பின்னா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிகுலேஷன் மற்றும் தனியாா் பள்ளிகள் உள்பட அனைத்துப் பள்ளிகளும், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை ஜூன் 4-ஆம் தேதி (வியாழக்கிழமை) திறக்கப்படும்.

இதையொட்டி, அனைத்து முதன்மை கல்வி அலுவலா்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலா்களுக்கு, பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னா் தேவையான ஆயத்தப் பணிகள் முடிக்கப்படுவதையும், மாணவா்களின் நலன், பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். மேலும், பெற்றோா், ஆசிரியா்கள், பள்ளி நிா்வாகங்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

schools will reopen on June 4, following the conclusion of the summer holidays.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.