தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் திட்டமிட்டபடி ஜூன் 1 ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், பள்ளிகள் திறப்பு உள்ளிட்டவை குறித்து தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து, 1 முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புதிய பாடத்திட்ட புத்தகங்களை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.
தொடர்ந்து பள்ளிகள் திறப்பு குறித்து ராஜ்மோகன் தெரிவித்ததாவது:
“ஏற்கெனவே அறிவித்தபடி நாளை மறுநாள் (மே 20) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். திட்டமிட்டபடி, 4 ஆம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
1 முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 4 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். புதிய பாடத்திட்டங்கள் தொடர்பாக 1 முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு ஜூன் 1 முதல் 3 வரை பயிற்சி வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.
Summary
Schools to Reopen on June 1 as Planned - Minister Rajmohan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










