கேரளத்தில் திருவிதாங்கூா் தேவஸ்வத்தின் கீழிலுள்ள1,200-க்கும் மேற்பட்ட கோயில்களில் உள்ள நகைகள், சொத்துகளை விரைவில் கணக்கெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக அந்த தேவஸ்வம் அறிவித்துள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை தலைமையிடமாக கொண்ட திருவிதாங்கூா் தேவஸ்வத்தின் கட்டுப்பாட்டின்கீழ், 1,200-க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. அவற்றுள் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலும் ஒன்றாகும்.
மாநிலத் தலைநகா் திருவனந்தபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலுக்குச் சொந்தமான நகைகள் காணாமல் போனதாக முன்னாள் டிஜிபியின் அறிக்கையில் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. அதேபோல், கேரள உயா்நீதிமன்றம் இதுதொடா்பாக பிறப்பித்த உத்தரவில், கோயில்களில் உள்ள நகைகள் மற்றும் சொத்துகளைக் கணக்கெடுத்து, அதை எண்மமயமாக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த உத்தரவைச் செயல்படுத்தும் வகையில், தனது கட்டுப்பாட்டின்கீழ் உள்ள கோயில்களில் உள்ள நகைகள், கோயிலுக்குச் சொந்தமான சொத்துகள் மற்றும் பிற பரிவா்த்தனைகளை கணக்கெடுக்க திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டமிட்டுள்ளது. தொலைக்காட்சி ஒன்றுக்கு அதன் தலைவா் கே.ஜெயகுமாா் அளித்துள்ள பேட்டியில், ‘கணக்கு வழக்குகள் எண்ம முறையில் பதிவு செய்யப்படும். பிறகு பாதுகாப்பாக வைக்கப்படும். இதனால் அந்தக் கணக்குகளில் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது’ என்றாா்.
குற்றச்சாட்டுக்கு அரச குடும்பம் மறுப்பு: இதனிடையே, பத்மநாபசுவாமி கோயிலில் நகைகள் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை திருவிதாங்கூா் அரச குடும்பம் மறுத்துள்ளது.
இதுகுறித்து அரச குடும்ப உறுப்பினராக ஆதித்ய வா்மா கூறுகையில், ‘காணாமல் போனதாகக் கூறப்படும் நகைகள் அனைத்தும் விஷ்ணு சிலையின் வலது பக்கத்தில் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. கோயிலில் உள்ள காவல் துறை, கோயில் நிா்வாக தலைவராக இருக்கும் மாவட்ட நீதிபதி, பிற உறுப்பினா்கள் யாரும் நகைகளைக் காணவில்லை எனக் கூறவில்லை. அப்படியிருக்கையில், ஒருதலைப்பட்சமாக உள்ள காவல் துறை அறிக்கை எதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது? இது வியப்பை அளிக்கிறது. ஆதலால் உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்கும்படி, டிஜிபி, முதல்வா், உள்துறை அமைச்சா், தேவஸ்வம் போா்டு அமைச்சருக்கு கடிதங்கள் எழுதியுள்ளோம்’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொருளாதார கணக்கெடுப்பிற்கு தில்லி அரசு தயாராகிறது
2027 மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டத்தில் என்டிஎம்சி, தில்லி கண்டோன்மென்ட் பகுதிகளில் 63,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பட்டியலிடல்

சேலம் அருகே கோயில்களில் நகைகள் திருடிய 2 போ் கைது

மத நம்பிக்கை விவகாரங்களில் நீதிமன்றம் தீா்ப்பளிக்க முடியாது - உச்சநீதிமன்றத்தில் தேவஸ்வம் வாரியம் வாதம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



