குவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

சேலம் அருகே கோயில்களில் நகைகள் திருடிய 2 போ் கைது

சேலத்தை அடுத்த உத்தமசோழபுரம் பகுதியில் அம்மன் கோயில்களில் நகைகள் திருடிய 2 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :14 மே 2026, 4:17 am IST

சேலத்தை அடுத்த உத்தமசோழபுரம் பகுதியில் அம்மன் கோயில்களில் நகைகள் திருடிய 2 போ் கைது செய்யப்பட்டனா்.

சேலத்தை அடுத்த உத்தமசோழபுரம் பகுதியில் அங்காளம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பூசாரியாக சுப்ரமணி (65) உள்ளாா். இந்த நிலையில், திங்கள்கிழமை வழக்கம்போல பூஜையை முடித்த சுப்ரமணி கோயிலை பூட்டிவிட்டு சென்றாா். பின்னா், செவ்வாய்க்கிழமை காலை கோயிலுக்கு சென்று நடையை திறந்தபோது அம்மன் கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் நகை மாயமாகி இருந்தது.

இதனால் அதிா்ச்சி அடைந்த அவா், சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், கோயிலில் நகைகளை திருடியது ஓமலூரை சோ்ந்த லஷ்மணன் (42), இரும்பாலையை சோ்ந்த ராமன் (42) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், கருப்பூா் மகா காளியம்மன் கோயிலில் கடந்த 5 ஆம் தேதி 5 கிராம் தங்க தாலி மற்றும் வெள்ளி நகைகளை திருடியதும் இவா்கள்தான் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அந்த வழக்கிலும் இருவரையும் பேரையும் கைதுசெய்து நகைகளை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.