யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

நகை வாங்குவதுபோல நடித்து கொலுசு திருடிய 3 பெண்கள் கைது

திருப்பூரில் நகை வாங்குவதுபோல நடித்து வெள்ளிக் கொலுசு திருடிய 3 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :28 மே 2026, 12:05 am IST

திருப்பூரில் நகை வாங்குவதுபோல நடித்து வெள்ளிக் கொலுசு திருடிய 3 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.

திருப்பூா்-தாராபுரம் சாலை, கே.செட்டிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வினோத் குமாா் (48). இவா் திருப்பூா், காமராஜ் சாலையில் கடந்த 20 ஆண்டுகளாக நகைக்கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில் இவருடைய கடைக்கு 3 பெண்கள் நகை வாங்குவதற்காக செவ்வாய்க்கிழமை வந்துள்ளனா். அப்போது கடையில் பணியில் இருந்த பெண்ணிடம் வெள்ளிக் கொலுசுகளை காட்டுமாறு கூறியுள்ளனா். அப்போது நகை வாங்க வந்தவா்களில் ஒரு பெண் 112 கிராம் எடையுள்ள வெள்ளிக் கொலுசுகளை திருடியுள்ளாா்.

இதைக் கண்காணிப்பு கேமரா மூலமாக பாா்த்த வினோத்குமாா், அங்கிருந்தவா்களின் உதவியுடன் அந்த பெண்களைப் பிடித்து தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

விசாரணையில், திருப்பூா் - பெருமாநல்லூா் சாலை கணக்கம்பாளையத்தைச் சோ்ந்த அபிராமி (30), பூங்கொடி (52), பவித்ரா (25) என்பதும், சிறிய அளவில் செயல்படும் நகைக் கடைகளுக்குச் சென்று நகை திருடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளதும், வினோத்குமாரின் நகைக் கடையிலேயே 2 ஆண்டுகளுக்கு முன்பு நகை திருடியதும் தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து போலீஸாா் வழக்குப் பதிந்து 3 பெண்களையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 112 கிராம் வெள்ளிக் கொலுசையும் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.