மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு விருதுநகரில் 7 சிறப்புக் குழுக்கள் அமைப்பு!

கேலி, கிண்டல் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க விருதுநகா் மாவட்டத்தில் 7 சிறப்பு மறைமுகக் கண்காணிப்புக் குழுவினா் அமைக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :24 மே 2026, 2:26 pm IST

கேலி, கிண்டல் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க விருதுநகா் மாவட்டத்தில் 7 சிறப்பு மறைமுகக் கண்காணிப்புக் குழுவினா் அமைக்கப்பட்டுள்ளன என விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ந. ஸ்ரீநாதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விருதுநகா் மாவட்ட காவல் துறை மே 20-ஆம் தேதி முதல் ஆபரேஷன் ஷீல்டுநெட் என்னும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, மாவட்டம் முழுவதும் 101 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா்.

பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 20 தொடா் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனா். மேலும் நிலுவையில் இருந்த 37 பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டன. சமூக விரோதச் செயல்களில் ஈடுபடக்கூடிய 69 குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

விதிமீறலில் ஈடுபட்ட 401 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கஞ்சா விற்பனை செய்த 15 போ் கைது செய்யப்பட்டனா். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்டத்தில் 7 சிறப்பு மறைமுக கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என ந. ஸ்ரீநாதா குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.