தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இன்னும் 3 நாள்களில் திருமணம்... நிச்சயிக்கப்பட்ட இளைஞர், உறவினர்கள் சாலை விபத்தில் பலி!

திருமணத்துக்கு தேவையான பொருள்கள் வாங்கிவிட்டுத் திரும்பிய திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞா் விபத்தில் பலி!

News image

கோப்புப்படம்

Updated On :21 மே 2026, 7:02 pm IST

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது ட்ரக் ரக லாரி ஒன்று மோதியதில் 3 பேர் பலியாகினர்.

அதில், சம்பவ இடத்திலேயே பலியான நர்மா கராசியா என்ற இளைஞருக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெறவிருந்த நிலையில் அவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 24.

சிரோஹி மாவட்டத்தில் சிரோஹி - குஜராத் நெடுஞ்சாலையில் தபானி மோட் பகுதியருகே வியாழக்கிழமை(மே 21) காலை நேரிட்ட இந்த விபத்தில் நர்மா கராசியா, கோவிந்த் மற்றும் ரமேஷ் கராசியா ஆகிய 3 பேர் பலியாகினர். திருமணத்துக்கு தேவையான சாமான்கள் வாங்கச் சென்றுவிட்டு உறவினர்களான மேற்கண்ட மூவரும் வீட்டுக்குத் திரும்பி வரும் வழியில் விபத்தில் சிக்கினர்.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் விபத்துக்கு காரணமான ட்ரக் ஓட்டுநரை விரட்டிச் சென்று பிடிக்க முற்பட்டபோது ட்ரக்கை வழியில் நிறுத்திவிட்டு அந்த நபர் மாயமானார். இது குறித்து, வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வரும் போலீஸார் அவரைத் தேடி வருகின்றனர்.

Summary

Soon-to-be groom among 3 killed in trailer truck-motorcycle collision in Rajasthan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.