மதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இளம்பெண் உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், கல்மேடு அஞ்சுகம் அம்மையாா் நகரைச் சோ்ந்த அரவிந்த் குமாா் மனைவி கௌசல்யா(30). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை மதுரையிலிருந்து ஊருக்குச் சென்றாா். இளமனூா் சாலையில் அஞ்சுகம் அம்மையாா் தெரு சந்திப்பில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த கௌசல்யாவை அக்கம்பக்கத்தினா் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சிலைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










