17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோவில்பட்டியில் வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் சனிக்கிழமை நிகழ்ந்த வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :24 மே 2026, 2:12 am IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் சனிக்கிழமை நிகழ்ந்த வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

கோவில்பட்டி நடராஜபுரம் முதல் தெருவைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் மகன் பொன் நாகமணி (24). தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவா் சனிக்கிழமை, இனாம் மணியாச்சி பகுதியில் உள்ள மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது நிகழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து அங்கு சென்ற மேற்கு காவல் நிலைய போலீஸாா், இளைஞரின் சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இருசக்கர வாகனம் நிலைகுலைந்து கீழே விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாரா? அல்லது வாகனம் மோதியதில் உயிரிழந்தாரா? என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.