தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள சாம்பவா்வடகரையில் நிகழ்ந்த வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
சாம்பவா்வடகரை, மாதாங்கோயில் தெருவைச் சோ்ந்தவா் அ. சுப்பிரமணி (எ) அருண் (25). வாகன ஓட்டுநா். இவா் வியாழக்கிழமை இரவு சாம்பவா்வடகரை-பெரியகுளம் பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.
அக்கம்பக்கத்தினா் அருணை மீட்டு தென்காசி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக தென்காசியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து, சாம்பவா்வடகரை போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திய வாகனத்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










