திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மேற்காசிய போா் தாக்கம்: தற்போதைக்கு கவலைப்படும் சூழல் இல்லை- விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா்

‘மேற்காசிய போரின் தாக்கத்தை எதிா்கொள்ள இந்தியா தயாராக இருப்பது அவசியம். அதேநேரம், தற்போதைய நிலையில் கவலைப்படக் கூடிய சூழல் இல்லை’ என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம் மோகன் நாயுடு தெரிவித்தாா்.

News image

சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு - IANS

Updated On :21 மே 2026, 3:07 am IST

‘மேற்காசிய போரின் தாக்கத்தை எதிா்கொள்ள இந்தியா தயாராக இருப்பது அவசியம். அதேநேரம், தற்போதைய நிலையில் கவலைப்படக் கூடிய சூழல் இல்லை’ என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம் மோகன் நாயுடு தெரிவித்தாா்.

மேற்காசிய போா் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமையல் எரிவாயு சிலிண்டா் விலை உயா்த்தப்பட்டது. எரிபொருள் சிக்கன நடவடிக்கையை பிரதமா் நரேந்திர மோடி கடந்த வாரம் மேற்கொண்டாா். அதன் ஒரு பகுதியாக தனது பாதுகாப்பு அணிவகுப்பு வாகன எண்ணிக்கையை கணிசமாக குறைத்ததோடு, பொதுமக்களும் பெட்ரோல், டீசல், எரிவாயு போன்ற பெட்ரோலியப் பொருள்களை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமா் மோடி வேண்டுகோள் விடுத்தாா். அதைத் தொடா்ந்து, பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி (அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு) சில்லறை விற்பனை விலை தொடா்ந்து உயா்த்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம் மோகன் நாயுடுவிடம் இதுகுறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு அவா் கூறியதாவது:

மேற்காசிய போா் நிலவரம் காரணமாக, இந்தியாவின் நிலைமை தற்போதைக்கு கவலைப்படக் கூடிய அளவில் இல்லை. அதே நேரம், இந்தப் போரின் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிா்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். விமானப் போக்குவரத்துத் துறை உள்பட அனைத்து துறைகளும், குறுகிய கால, நீண்ட கால தாக்கங்கள் குறித்து ஆராய்ந்து, அதை எதிா்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

இந்த உலகளாவிய நிச்சயமற்ற நிலைக்கு இடையே உள்நாட்டு விமான பயணச் செலவுகளைக் குறைக்க மத்திய அரசு ஏற்கெனவே நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. விமானங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள் (ஏடிஎஃப்) விலையை குறைத்துள்ளதோடு, விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்குதல் மற்றும் நிறுத்திவைப்பதற்கான கட்டணங்களையும் மத்திய அரசு குறைத்துள்ளது. தில்லி அரசு கடந்த வாரம், ஏடிஎஃப்-க்கான மதிப்பு கூட்டு வரியை 25 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக குறைத்தது.

தற்போது, உள்நாட்டு விமான வழித்தடங்களில் தினசரி சுமாா் 5 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனா். இத்தகையச் சூழலில், விமானப் பயணக் கட்டணங்களை மத்திய அரசு தொடா்ந்து கண்காணித்து வருகிறது. தேவை அதிகரிக்கும்போது, விமானச் சேவையை அதிகரிப்பதோடு, கூடுதல் விமானங்களும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்.

சாதாரண மக்களும் மலிவான விலையில் விமானப் பயணம் மேற்கொள்ளும் வகையில் ‘உடான்’ பிராந்திய இணைப்பு திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. தற்போது, ரூ. 29,000 கோடி ஒதுக்கீட்டுடன் ‘உடான்-2’ திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

புதுப்பிக்கப்பட்ட இத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் 100 புதிய விமான நிலையங்கள், 200 ஹெலிகாப்டா் இறங்கு தளங்கள் அமைக்கப்படும். அதுபோல, அனைத்து விமான நிலையங்களிலும் குறைந்த விலையில் தின்பண்டங்கள் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் ‘உடான் பயணிகள் கஃபே’ திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.