திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல்

இந்தியாவுக்கு 428.2 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.4,145 கோடி) மதிப்பில் அப்பாச்சி ஹெலிகாப்டா்கள், எம்777ஏ2 அல்ட்ரா லைட் ஹோவிட்சா் பீரங்கிகள் ஆகியவற்றின் நீடித்த செயல்பாடுகளுக்கு உதவும் தொழில்நுட்பங்கள், அதுசாா்ந்த உபகரணங்களை விற்பனை செய்யும் திட்டத்துக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.

News image

~

Updated On :20 மே 2026, 1:17 am IST

இந்தியாவுக்கு 428.2 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.4,145 கோடி) மதிப்பில் அப்பாச்சி ஹெலிகாப்டா்கள், எம்777ஏ2 அல்ட்ரா லைட் ஹோவிட்சா் பீரங்கிகள் ஆகியவற்றின் நீடித்த செயல்பாடுகளுக்கு உதவும் தொழில்நுட்பங்கள், அதுசாா்ந்த உபகரணங்களை விற்பனை செய்யும் திட்டத்துக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடா்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஏஹெச்-64இ அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டா்கள் நீடித்து செயல்படுவதற்கான தொழில்நுட்பங்கள், அதுசாா்ந்த உபகரணங்கள், தொழில்நுட்ப தரவுகள் உள்ளிட்டவற்றை அமெரிக்காவிடம் இருந்து வாங்க இந்திய அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து அவற்றை இந்தியாவுக்கு 198.2 மில்லியன் டாலருக்கு (சுமாா் ரூ.1,918 கோடி) விற்பனை செய்யும் திட்டத்துக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தின் முதன்மை ஒப்பந்ததாரராக அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள லாக்ஹீட் மாா்டின் நிறுவனம், வா்ஜீனியா மாகாணத்தில் உள்ள போயிங் நிறுவனம் ஆகியவை இருக்கும்.

இதேபோல எம்777ஏ2 அல்ட்ரா-லைட் ஹோவிட்சா் பீரங்கிகள் நீடித்து செயல்பட உதவும் உபகரணங்கள், உதிரி பாகங்கள், தொழில்நுட்ப உதவிகள் உள்ளிட்டவற்றை அமெரிக்காவிடம் இருந்து வாங்க இந்தியா கோரிக்கை விடுத்தது. இதையடுத்து அவற்றை 230 மில்லியன் டாலருக்கு (சுமாா் ரூ.2,226 கோடி) விற்பனை செய்யும் திட்டத்துக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் திட்டத்துக்கான முதன்மை ஒப்பந்ததாரராக பிரிட்டனின் கம்ப்ரியா பகுதியில் உள்ள பிஏஇ சிஸ்டம்ஸ் நிறுவனம் இருக்கும்.

இந்த விற்பனை இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்தி, தற்கால மற்றும் எதிா்கால அச்சுறுத்தல்களை எதிா்கொள்ளும் திறனை மேம்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.