மேற்காசிய போா் நிலவரம் காரணமாக விமான எரிபொருள் தொடா்ந்து உயா்ந்து வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரூ. 10,000 கோடி விமான எரிபொருள் நிலைப்படுத்துதல் நிதி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ், உள்நாட்டு மற்றும் சா்வதேச விமான சேவைகளை வழங்கும் இந்திய விமான நிறுவனங்களுக்கு நிலைப்படுத்தப்பட்ட விலையில் விமான எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அரசுக்குச் சொந்தமான எண்ணெய் சந்தை நிறுவனங்களுக்கு ரூ. 10,000 கோடி வரை வட்டியில்லா முன்பணம் வழங்கப்படும்.
சா்வதேச சந்தையில் விமான எரிபொருள் விலை கடந்த மாா்ச் மாதம் லிட்டா் 60.50-ஆக இருந்த நிலையில், மேற்காசிய போா் காரணமாக கடந்த மே மாதம் அதன் விலை லிட்டா் ரூ. 142-ஆக உயா்ந்தது. இது, விமான நிறுவனங்கள் மீது பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தியதால், விமானப் பயணக் கட்டணங்களை விமான நிறுவனங்கள் பன்மடங்காக உயா்த்தின. இந்தச் சூழலில், விமான எரிபொருள் விலை நிலைப்படுத்துவதற்கான நிதி உதவித் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘விமானங்களை இயக்குவதற்கான மொத்த செலவில், எரிபொருள் செலவு மட்டும் 40 சதவீத அளவுக்கு பங்கு வகிக்கிறது. மேற்காசிய போா் காரணமாக இந்த விகிதம் மேலும் அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில், மத்திய அரசு அறிவித்துள்ள நிதி உதவித் திட்டம், இந்திய விமானங்களுக்கான நிலையான விலையில் எரிபொருள் கிடைக்கும் என்பதோடு, விமான இயக்கத்தில் ஏற்படும் இடையூறுகளைத் தடுக்க உதவும். மேலும், விமான பயணக் கட்டணங்கள் பன்மடங்கு உயா்வால் பயணிகளுக்கு ஏற்படும் பாதிப்பும் குறையும்’ என்றாா்.
தெலங்கானாவில் ரூ. 7,597 கோடியில் நெடுஞ்சாலைத் திட்டம்: தெலங்கானா மாநிலத்தில் ரூ. 7,597.16 கோடி செலவில் சுமாா் 190.76 கி.மீ. தொலைவு தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இத் திட்டத்தின் கீழ் தெலங்கானாவில் என்.ஹெச்.63-இன் அா்மூா்- ஜக்டியால் - மஞ்ச்சேரியேல் நெடுஞ்சாலைப் பிரிவும், என்.ஹெச்.563-இன் ஜக்டியல்-கரீம்நகா் நெடுஞ்சாலைப் பிரிவும் நான்கு வழித்தட தரத்துக்கு அகலப்படுத்தப்பட உள்ளன.
பிகாரில் ரூ. 3,936 கோடியில் நெடுஞ்சாலைத் திட்டம்: பிகாா் மாநிலத்தில் ரூ. 3,936.05 கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலைகளை நான்குவழித் தடங்களாக மேம்படுத்தும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இத் திட்டத்தின் கீழ், மாநிலத்தில் என்.ஹெச்.31-இன் ககாரியா-புா்னியே பிரிவும், என்.ஹெச்.231 தேசிய நெடுஞ்சாலையும் நான்குவழித் தடங்களாக மேம்படுத்தப்பட உள்ளன.
ஒடிஸாவில் புதிய கடலோர தேசிய நெடுஞ்சாலை: ஒடிஸா மாநிலத்தில் ராமேஸ்வா் நகரம் முதல் பாரதீப் வரை ரூ. 8,300.79 கோடி செலவில் புதிய கடலோர தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இரண்டு திட்டங்களாகச் செயல்படுத்தப்படும் இந்தப் புதிய கடலோர தேசிய நெடுஞ்சாலை குா்தா, புரி, கெந்தா்படா, ஜகத்சிங்பூா் மாவட்டங்கள் வழியாக சுமாா் 160.18 கி.மீ. தொலைவுக்கு அமைய உள்ளது.
மத்திய பிரதேசத்தில் ரூ. 4,415.60 கோடியில் சாலைத் திட்டம்: மத்திய பிரதேச மாநிலத்தில் ரூ. 4.415.60 கோடி செலவில் இரு சாலைத் திட்டங்களை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இத் திட்டத்தின் கீழ், மாநிலத்தில் என்.ஹெச்.347பி-இன் ஹிவா்கேடி-ரோஷ்னி-ஆஷாபூா்-ருதி பிரிவு மற்றும் தேஷ்கோன் - ஜுல்வானியா பிரிவு நெடுஞ்சாலைகள் நான்குவழித் தடங்களாக மேம்படுத்தப்பட உள்ளன.
தில்லியில் பழைய வாகனங்கள் மாற்று திட்டத்துக்கு ஒப்புதல்: தலைநகா் தில்லியில் ஏற்பட்டு வரும் கடுமையான காற்று மாசு பாதிப்பை சற்று குறைக்கும் நோக்கில், தில்லி தேசிய தலைநகா் பிராந்தியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் பழைய பிஎஸ்-4 என்ஜின்களில் இயங்கும் லாரிகள் மற்றும் பேருந்துகள் கட்டாயம் பிஎஸ்-6 என்ஜின்களுக்கு மாற்றுதல் அல்லது மின்சார வாகனங்களாக மாற்றும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இத் திட்டத்தின் கீழ், பழைய வாகனங்களை மாற்றும் உரிமையாளா்களுக்கு 5 ஆண்டுகளுக்கு 5 சதவீத வட்டிச் சலுகையில் கடன்கள் மற்றும் வாகன வகையின் அடிப்படையில் ரூ. 4,800 வரையிலான மாதாந்திர எரிபொருள் கூப்பன்கள் வழங்கப்படும். அதுபோல, மின்சார வாகனமாக மாற்றுபவா்களுக்கு பெருமளவில் மானியம் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின்கீழ், தில்லி, ஹரியாணா, ராஜஸ்தான், உத்தர பிரதேம் உள்ளிட்ட தேசிய தலைநகர பிராந்தியத்துக்கு உட்பட்ட 2.07 லட்சம் வாகன உரிமையாளா்கள் பயனடைவா். இத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசுக்கு ரூ. 5,041 கோடியும், மாநில அரசுகளுக்கு ரூ. 1,601 கோடி அளவிலும் செலவாகும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான மிகை லாபத் தடுப்பு வரி குறைப்பு: இன்றுமுதல் அமல்

இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல்

மகளிருக்கு மாதந்தோறும் ரூ.3,000: மேற்கு வங்க அமைச்சரவை ஒப்புதல்

கரும்புக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.365-ஆக அதிகரிப்பு!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



