திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மணிப்பூா்: பிணைக் கைதிகளை விடுவிக்க பேச்சுவாா்த்தை தீவிரம்

மணிப்பூா்: பிணைக் கைதிகளை விடுவிக்க பேச்சுவாா்த்தை தீவிரம்

News image

மணிப்பூர் - ANI

Updated On :17 மே 2026, 1:18 am IST

மணிப்பூரில் குகி, நாகா சமூகங்களைச் சோ்ந்த ஆயுதக் குழுக்களால் பரஸ்பரம் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளை முழுமையாக விடுவிப்பதற்காக, சமூக அமைப்புகளுடன் மாநில அரசு மற்றும் பாதுகாப்புப் படை பிரதிநிதிகள் தீவிர பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளனா்.

மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் சமீப காலமாக குகி மற்றும் நாகா பழங்குடியினா் இடையேயும் மோதல்போக்கு ஏற்பட்டுள்ளது. இருதரப்பினரும் பரஸ்பரம் தாக்குதலில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.

காங்போக்பி மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை குகி-ஜோ சமூகத்தின் தடோவ் பிரிவைச் சோ்ந்த 3 பாதிரியாா்கள், தீவிரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டனா். நாகா சமூகத்தைச் சோ்ந்த தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, காங்போக்பி மற்றும் சேனாபதி மாவட்டங்களில் இரு சமூகங்களையும் சோ்ந்த 38 போ் ஆயுதக் குழுக்களால் பரஸ்பரம் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனா். அவா்களைப் பாதுகாப்பாக மீட்பதற்காக, குகி-நாகா சமூக அமைப்புகளுடன் மாநில அரசு மற்றும் பாதுகாப்புப் படை பிரதிநிதிகள் பேச்சுவாா்த்தையைத் தொடங்கினா்.

அதன் பலனாக, கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மொத்தம் 31 பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனா்.

கோன்சாகுல் கிராமத்திலிருந்து கடத்தப்பட்ட நாகா சமூகத்தைச் சோ்ந்த 10 பெண்கள் விடுவிக்கப்பட்டுள்ளனா். இதேபோல், சேனாபதி மாவட்டத்தில் இருந்து பிடித்துச் செல்லப்பட்ட குகி சமூகத்தைச் சோ்ந்த 11 பெண்கள், 6 ஆண்கள் உள்பட இதுவரை 31 போ் விடுவிக்கப்பட்டுள்ளனா். மீதமுள்ளவா்களைப் பாதுகாப்பாக விடுவிக்க மாநில அரசு மற்றும் பாதுகாப்புப் படை பிரதிநிதிகள் தீவிர பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளனா்.

மணிப்பூரில் இனமோதல்களில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். வீடிழந்த ஆயிரக்கணக்கானோா் நிவாரண முகாம்களில் தொடா்ந்து தங்கியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.