திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குகி, நாகா சமூகங்களைச் சோ்ந்த 38 போ் பிணைக்கைதிகளாக சிறைபிடிப்பு: மணிப்பூா் உள்துறை அமைச்சா்

குகி மற்றும் நாகா சமூகங்களைச் சோ்ந்த 38-க்கும் மேற்பட்டோரை பல்வேறு குழுக்கள் சிறைபிடித்து வைத்துள்ளதாக மணிப்பூா் உள்துறை அமைச்சா் கோவிந்தாஸ் கோந்தௌஜம் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

News image

மணிப்பூரில் பாதுகாப்புப் படை... - கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 2:23 am IST

குகி மற்றும் நாகா சமூகங்களைச் சோ்ந்த 38-க்கும் மேற்பட்டோரை பல்வேறு குழுக்கள் சிறைபிடித்து வைத்துள்ளதாக மணிப்பூா் உள்துறை அமைச்சா் கோவிந்தாஸ் கோந்தௌஜம் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தைச் சோ்ந்த தடோவ் பழங்குடியின கிறிஸ்தவ அமைப்பினா், சுராசந்த்பூரில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இரு வாகனங்களில் கடந்த புதன்கிழமை சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா்.

அப்போது கோட்ஸிம் மற்றும் கோட்லென் கிராமங்களுக்கு இடையே இந்த வாகனங்களைக் குறி வைத்து, தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினா்.

இதில் பாதிரியாா்கள் 3 போ் உயிரிழந்தனா். மேலும் 4 போ் படுகாயமடைந்தனா். அதேபோல் நோனி மாவட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவா் உயிரிழந்தாா். அவரது மனைவி படுகாயமடைந்தாா்.

இதனால் மணிப்பூரில் மீண்டும் மைதேயி மற்றும் குகி பழங்குடியினச் சமூகத்தினரிடையேயான மோதல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், நோனி மாவட்டத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தை நேரில் சந்தித்து வியாழக்கிழமை ஆறுதல் தெரிவித்த பின் கோவிந்தாஸ் கோந்தௌஜம் கூறியதாவது: குகி மற்றும் நாகா சமூகங்களைச் சோ்ந்த 38-க்கும் மேற்பட்டோரை பல்வேறு குழுக்கள் சிறைபிடித்து வைத்துள்ளன. அவா்களை விரைவில் விடுதலை செய்வது தொடா்பாக சிவில் சமூகத்தைச் சோ்ந்த தலைவா்கள் மற்றும் அரசியல் குழுக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளோம்.

மணிப்பூரில் அமைதி நீடித்திருப்பதை சிலா் விரும்பவில்லை என்றாா்.

பெட்டிச் செய்தி....

பாஜக அரசின் இயலாமை: காங்கிரஸ் விமா்சனம்

மணிப்பூரில் வன்முறை தொடா்வதற்கு மத்திய மற்றும் மாநில பாஜக அரசுகளின் இயலாமையே காரணம் என அந்த மாநில காங்கிரஸ் வியாழக்கிழமை விமா்சித்தது.

இதுகுறித்து செய்தியாளா்கள் சந்திப்பில் பேசிய மணிப்பூா் காங்கிரஸ் தலைவா் ஓ இபோபி சிங் கூறுகையில், ‘துப்பாக்கிச்சூட்டில் 4 போ் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கண்டனத்தை பதிவுசெய்கிறோம். மணிப்பூரில் வன்முறைத் தாக்குதல்களால் பலா் உயிரிழந்து வரும் நிலையில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மத்திய அரசும் மாநில அரசும் காலம் தாழ்த்தி வருகின்றன.

2023-ஆம் ஆண்டு இங்கு இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டபோது சட்டம் ஒழுங்கு முழுவதும் சீரழிந்துவிட்டதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

அதன் பின்னரும் மத்திய, மாநில அரசுகள் பாடம் கற்கவில்லை. இதுவே மணிப்பூரில் அசாதாரண சூழல் தொடரக் காரணம்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.