தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஒடிசா பெட்ரோல் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்! மோடி அறிவுரை காரணமா?

ஒடிசாவில் பெட்ரோல் தட்டுப்பாடு என அச்சம் நிலவியதை பற்றி..

News image

பெட்ரோல் நிலையங்களில் அலைமோதிய கூட்டம் - பிடிஐ

Updated On :14 மே 2026, 4:20 pm IST

ஒடிசா மாநிலம் முழுவதும் பெட்ரோல் தட்டுப்பாடு என அச்சம் நிலவியதையடுத்து பெட்ரோல் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்துள்ளனர்.

மாநிலத் தலைநகரான புவனேஸ்வர் மட்டுமின்றி, ஜெய்ப்பூர், கலஹண்டி, கேந்திரபாரா மற்றும் பிற இடங்களிலும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் வாகனங்களின் நீண்ட வரிசைகள் காணப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெட்ரோல் நிலையங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காகத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சில பெட்ரோல் நிலையங்களில் இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 200 வரையிலும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 2,000 வரையிலும் பெட்ரோல் நிரப்ப அனுமதிப்பதன் மூலம் விநியோகத்தை ஒழுங்குபடுத்தின.

இதுதொடர்பாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சஞ்சய் லாத் கூறுகையில்,

பிரதமர் நரேந்திர மோடி பெட்ரோல், டீசலைப் பயன்படுத்தும்போது மக்கள் விழிப்புடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து, மக்கள் பீதியடைந்து எரிபொருளை முண்டியடித்து வாங்கியதன் விளைவாகவே இந்தத் தற்காலிகச் சூழல் உருவாகியுள்ளது.

பிரதமர் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது குறித்து விடுத்த செய்தியை மக்கள் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர். ஒடிசாவில் பெட்ரோல் மற்றும் டீசல் இருப்பு போதுமான அளவில் உள்ளது. மாநிலத்தில் பெட்ரோலுக்கான பற்றாக்குறை இல்லை. மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்.

மாநிலத்தில் உள்ள மொத்தம் 3 ஆயிரம் பெட்ரோல் நிலையங்களில் கடந்த 2, 3 நாள்களாக மக்கள் பீதியடைந்து முண்டியடித்துக் கொண்டு பெட்ரோலை போட்டிப் போட்டுக் கொண்டு வாங்கியதன் காரணமாக, சுமார் 100 நிலையங்களில் எரிபொருள் இருப்பு முழுமையாகத் தீர்ந்துவிட்டது.

கடந்த மூன்று நாள்களில் பெட்ரோல், டீசல் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. புவனேஸ்வரில் உள்ள 41 பெட்ரோல் நிலையங்களில், ஒருசில நிலையங்களில் பெட்ரோல் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான நிலையங்களில், இன்றைக்கு மாலைக்குள் மீண்டும் எரிபொருள் நிரப்பப்பட்டுவிடும் என்று அவர் தெரிவித்தார்.

ஒருசில பெட்ரோல் நிலையங்களில் அதிகளவு மக்கள் கூடியதால் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் பெட்ரோல் போட குவிந்தவர்களை ஒழுங்குப்படுத்தி வரிசையில் அனுமதித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Summary

Long queues of vehicles were seen at fuel outlets across Odisha on Thursday, with some showing "no stock" board.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.