திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

11 நாளில் பெட்ரோல் விலை ரூ. 8 உயர்வு! முதல்வர் அமைதியாக இருப்பது ஏன்? சிபிஎம்

வி.டி. சதீசன் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு 4 முறை பெட்ரோல், டீசல் விலை ஏற்றப்பட்டுள்ளதாக சிபிஎம் குற்றச்சாட்டு...

News image

எம்.வி. கோவிந்தன் - ஏன்என்ஐ

Updated On :2 ஜூன் 2026, 7:11 pm IST

பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரத்தில் முதல்வர் வி.டி. சதீசன் மெளனம் காப்பதாக மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் எம்.வி. கோவிந்தன் இன்று (ஜூன் 2) குற்றம் சாட்டினார்.

கடந்த 11 நாள்களில் மட்டும் ரூ. 8 வரை பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதாகவும், எதிர்க்கட்சியாக இருக்கும்போது மாபெரும் போராட்டத்தை நடத்தியவர் தற்போது ஆட்சியில் அமர்ந்ததும் அமைதியாகிவிட்டதாகவும் விமர்சித்தார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இது தொடர்பாக செய்தியாளர்களுடன் எம்.வி. கோவிந்தன் பேசியதாவது:

''கடந்த காலத்தில், எரிபொருள் மீதான வரி வருவாயை அரசு தியாகம் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை வி.டி. சதீசன் எடுத்திருந்தார். எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தையும் நடத்தினார். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது போராட்டத்தின் ஒரு பகுதியாக மிதிவண்டியில் சென்ற புகைப்படமும் உள்ளது.

மாநில முதல்வராக வி.டி. சதீசன் பொறுப்பேற்றதிலிருந்து, எரிபொருள் விலை நான்கு முறை உயர்த்தப்பட்டுள்ளன. ஆயினும், சதீசன் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார்.

மேற்கு ஆசியாவில் நிலவிவரும் போர்ச்சூழல் காரணமாக எரிபொருள் விலையில் மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மத்திய அரசின் கொள்கைகள் குறித்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

எரிபொருள் பற்றாக்குறையால் பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதிலும் சிக்கல்கள் எழுந்துள்ளன. விடுதி, உணவகங்களிலும் விலை ஏற்றம். இதனால் மக்கள் நெருக்கடியை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது'' எனக் குறிப்பிட்டார்.

Summary

Prices up by Rs 8 in 11 days, yet CM silent": CPI(M)'s Govindan slams Keralam Chief Minister Satheesan over fuel hike

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.