தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

உள்கட்சி பூசல்? கேரள முதல்வர் வி.டி. சதீசன் இன்று தில்லி செல்கிறார்!

கேரள முதல்வர் வி.டி. சதீசன் தில்லி செல்வது குறித்து...

News image

கேரள முதல்வர் வி.டி. சதீசன் - கோப்புப் படம் | ENS

Updated On :22 மே 2026, 4:05 pm IST

கேரள முதல்வர் வி.டி. சதீசன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களைச் சந்திக்க வெள்ளிக்கிழமை (மே 22) தில்லி செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 102 இடங்களைக் கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. ஆனால், கேரளத்தின் முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.சி. வேணுகோபால், வி.டி. சதீசன் மற்றும் ரமேஷ் சென்னிதலா இடையே கடும் போட்டி நிலவியது.

இதனைத் தொடர்ந்து, நீண்ட இழுபறிக்குப் பிறகு கேரளத்தின் புதிய முதல்வராக வி.டி. சதீசன் கடந்த மே 18 அன்று பதவியேற்றுக்கொண்டார். இந்த விழாவில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் பங்கேற்றனர்.

இருப்பினும், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர்களில் ஒருவரான கே.சி. வேணுகோபாலுக்கு பதிலாக, வி.டி. சதீசன் கேரளத்தின் முதல்வராகத் தேர்வானதில் சில முக்கிய காங்கிரஸ் தலைவர்களுக்கு உடன்பாடில்லை என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்த நிலையில், கேரள முதல்வர் வி.டி. சதீசன் இன்று தில்லி செல்வதாகவும், அங்கு ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்களைச் சந்தித்து உரையாடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தின் முதல்வராகப் பதவியேற்ற ஒரே வாரத்துக்குள் நடைபெறும் வி.டி. சதீசனின் தில்லி பயணம் பெருமளவில் கவனம் பெற்றுள்ளது. ஆனால், கேரள முதல்வரின் தில்லி பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் திட்டமில்லை எனக் கூறப்படுகிறது.

Summary

Kerala Chief Minister V.D. Satheesan will travel to Delhi on Friday (May 22) to meet with senior leaders of the Congress party.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.