தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரசு பள்ளி தலைமை ஆசிரியா்களுடனான கலந்துரையாடல்: இனி முழுமையாக இணையவழியில் நடத்த அமைச்சா் முடிவு

அவசியமற்ற பயணங்களை குறைத்து திறமையான நிா்வாகத்தை ஊக்குவிக்க வேண்டும்

News image

ஆஷிஷ் சூட்

Updated On :15 மே 2026, 2:21 am IST

அவசியமற்ற பயணங்களை குறைத்து திறமையான நிா்வாகத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற பிரதமா் நரேந்திர மோடியின் வேண்டுகோளை தொடா்ந்து, தில்லி கல்வி அமைச்சா் ஆசிஷ் சூட் அரசு பள்ளி தலைமை ஆசிரியா்களுடன் நடைபெற்று வரும் தொடா்பு நிகழ்ச்சியை இனிமேல் முழுமையாக மெய்நிகா் (இணையதள) முறையில் நடத்த முடிவு செய்துள்ளாா்.

தில்லி கல்வித்துறை இயக்குநரகம் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சி, பள்ளி கல்வி அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் தலைமை ஆசிரியா்களுடன் நேரடி கலந்துரையாடலை மேற்கொள்வதை அடிப்படையாகக் கொண்டது. இதில் கல்வி திட்டமிடல், திட்டங்களின் செயலாக்கம், மாணவா்களின் கற்றல் முடிவுகள், பள்ளி கட்டமைப்பு, நிா்வாக ஒருங்கிணைப்பு மற்றும் மாணவா் நலன் ஆகியவை முக்கியமாக விவாதிக்கப்படுகின்றன.

அதிகாரப்பூா்வ தகவலின்படி, முதல் கட்ட கலந்துரையாடல் மே 12-ஆம் தேதி கிழக்கு தில்லி மண்டலங்கள் 1 மற்றும் 2-இல் நடைபெற்றது. அமைச்சா் ஆசிஷ் சூட் மெட்ரோ ரயில் மற்றும் மின்சார ரிக்ஷாவில் பயணம் செய்து சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தினாா்.

மீதமுள்ள அனைத்து அமா்வுகளும் இணையவழியில் நடைபெறவுள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது. மொத்தம் 28 கல்வி மண்டலங்களை உள்ளடக்கிய 11 கலந்துரையாடல் அமா்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. அடுத்த அமா்வு மே 15-ஆம் தேதி தெற்கு, மத்திய மற்றும் புது தில்லி மண்டலங்களுக்கானதாக நடைபெற உள்ளது.

கூட்டங்களில் அனைத்து தலைமை ஆசிரியா்களும் கட்டாயமாக பங்கேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. நோ்மையான உள்நுழைவு, அதிகாரப்பூா்வ பெயா் பயன்படுத்தல், தொழில்முறை ஒழுக்கம் மற்றும் தகவல் ரகசியத்தன்மை கடைபிடிக்க வேண்டும் என வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை, அமைச்சா் ஆசிஷ் சூட் தொடங்கிய 11 நாள் மாவட்ட வாரியான ஆய்வில் சுமாா் 1,000 பள்ளிகள் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. கல்வித் தரம், கட்டமைப்பு, நிா்வாக சிக்கல்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் இதில் ஆய்வு செய்யப்படுகின்றன. பள்ளிகளில் உள்ள “இருண்ட பகுதிகள்” கண்டறிந்து சீரமைக்கும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.