திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வீழ்ச்சியடையும் ரூபாய் மதிப்பு: 1 டாலர் ரூ. 58-இல் இருந்து ரூ. 95.74-ஆக வீழ்ச்சி! - காங்கிரஸ் விமர்சனம்

ரூபாய் மதிப்பு வரலாற்றில் இதுவரை கண்டிராத வீழ்ச்சி...

News image

ANI

Updated On :12 மே 2026, 5:09 pm IST

ரூபாய் மதிப்பு வரலாற்றில் இதுவரை கண்டிராத வீழ்ச்சியடைந்திருப்பதைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சியான காங்கிரஸ் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து தமது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கேலிச்சித்திரம் வெளியிட்டுள்ளது.

மேற்கு ஆசிய அமைதித் திட்டத்திற்கான ஈரானின் பதிலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்ததைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்ந்தது. தங்கம் வாங்குவதைத் தவிர்க்கவும், சிக்கன நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்கவும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் குடிமக்களை வலியுறுத்தியது, சந்தை உணர்வுகளை வெகுவாக பாதித்தது.

இதன் காரணமாக, வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 82 காசுகள் சரிந்து ரூ. 95.31 என்ற வரலாறு காணாத குறைந்தபட்ச அளவில் வாரத்தின் முதல் பணி நாளான திங்கள்கிழமை(மே 11) நிலைபெற்றது.

இந்த நிலையில், இன்று (மே 12) கேலிச்சித்திரம் வெளியிட்டுள்ள காங்கிரஸ், அதில், ‘வீழ்ச்சியடையும் ரூபாய்; தோல்வியடையும் பிரதமர்!’ என்று குறிப்பிட்டு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடந்த 2014-இல், ரூ. 58-ஆக இருந்த நிலையில், 2026-இல் அதன் மதிப்பு ரூ. 95.74-ஆக சரிந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

Summary

Currency crashes to record low - ‘Falling Rupee, Failing PM’ - Congress slams PM Modi via cartoon picture

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.