ஹைதராபாத் : பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (மே 10) தெலங்கானாவுக்குச் சென்றார். காங்கிரஸ் ஆளும் தெலங்கானாவில் அவர் ரூ. 9,400 கோடியிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
கா்நாடகம், தெலங்கானா, குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (மே 10) முதல் இரு நாள்கள் பயணம் மேற்கொண்டிருக்கிறாா். இதற்காக முதலில் இன்ரு காலை பெங்களூரு சென்ற அவர், அங்கு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு தெலங்கானா தலைநகா் ஹைதராபாதுக்கு மாலை சென்றடைந்தார்.
அங்கு, வாரங்கல்லில் கட்டமைக்கப்பட்டுள்ள புதிய ஜவுளி பூங்கா உள்பட ரூ.9,400 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்து, புதிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
இன்றிரவில் குஜராத் மாநிலம், ஜாம்நகரை சென்றடையும் அவா், பிரசித்தி பெற்ற சோம்நாத் கோயிலில் திங்கள்கிழமை (மே 11) நடைபெறும் அமிா்தப் பெருவிழாவில் பங்கேற்கவுள்ளாா்.
முன்னதாக, பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, திமுகவை விட்டு காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி அமைத்திருப்பதை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
Summary
PM Modi lays foundation stone, inaugurates development projects worth Rs 9,400 cr in Hyderabad.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






