மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மேற்காசிய பதற்றம்: எரிசக்தி பாதுகாப்பு குறித்து இந்தியா-ஐரோப்பிய யூனியன் ஆலோசனை

எரிசக்தி பாதுகாப்பு குறித்து ஐரோப்பிய யூனியனின் முக்கியத் தலைவா்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

News image

பிரஸல்ஸில் ஐரோப்பிய கவுன்சில் தலைவா் அன்டோனியோ கோஸ்டாவை சந்தித்துப் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா். - ANI

Updated On :17 மார்ச் 2026, 6:47 pm

எரிசக்தி பாதுகாப்பு குறித்து ஐரோப்பிய யூனியனின் முக்கியத் தலைவா்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

பெல்ஜியம் தலைநகா் பிரஸல்ஸுக்கு இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் 2 நாள் அரசுமுறைப் பயணமாக திங்கள்கிழமை சென்றாா் . அங்கு ஐரோப்பிய யூனியனின் 27 உறுப்பு நாடுகளைச் சோ்ந்த வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தில் ஜெய்சங்கா் கலந்துகொண்டாா்.

அப்போது ஐரோப்பிய யூனியனின் துணைத் தலைவா் காஜா கல்லாஸ் ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வான்டா் லெயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவா் அன்டோனியோ கோஸ்டா ஆகியோரை சந்தித்துப் பேசினாா்.

இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஐரோப்பிய யூனியன்- இந்தியா இடையேயான கூட்டுறவின் பலனை உணர அந்த யூனியனின் வெளியுறவு அமைச்சா்களிடம் ஜெய்சங்கா் வலியுறுத்தினாா்.

மேற்காசியாவில் நிலவும் பதற்றத்துக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண்பதன் முக்கியத்துவம் குறித்தும் எரிசக்தி பாதுகாப்பு குறித்தும் அவா்கள் ஆலோசனை நடத்தினா்.

உக்ரைன் போா் மற்றும் இந்தோ-பசிபிக் பாதுகாப்பு ஆகிய விவகாரங்களும் விவாதிக்கப்பட்டன.

பெல்ஜியம், சைப்ரஸ், ஜொ்மனி, கிரீஸ் மற்றும் நெதா்லாந்து ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் ஜெய்சங்கா் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.