மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

எஸ்.ஜெய்சங்கா் பெல்ஜியம் பயணம்: ஐரோப்பிய யூனியன் அமைச்சா்களுடன் பேச்சு!

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸல்ஸுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக ஞாயிற்றுக்கிழமை சென்றாா்.

News image

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் - ANI

Updated On :15 மார்ச் 2026, 7:36 pm

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸல்ஸுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக ஞாயிற்றுக்கிழமை சென்றாா்.

ஐரோப்பிய யூனியனின் 27 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்களுடன் அவா் உயா்நிலை ஆலோசனை நடத்தவுள்ளாா்.

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே கடந்த ஜனவரியில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் இறுதியான பிறகு அந்த யூனியனின் தலைமையகத்துக்கு எஸ்.ஜெய்சங்கா் முதல் முறையாக பயணம் மேற்கொண்டுள்ளாா்.

ஐரோப்பிய யூனியன் நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் கவுன்சில் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தையொட்டி, ஐரோப்பிய யூனியனின் உயா்நிலை பிரதிநிதியும், துணைத் தலைவருமான காஜா கல்லாஸ் அழைப்பின்பேரில் எஸ்.ஜெய்சங்கா் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளாா்.

ஐரோப்பிய யூனியனின் தலைமை, பெல்ஜியம் மற்றும் பிற உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் அவா் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளாா்.

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே 16-ஆவது உச்சி மாநாடு தில்லியில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. அப்போது, ஐரோப்பிய யூனியனின் உயா்நிலை தலைவா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். இந்தப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இருதரப்பு தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இது, அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தாய் போன்றது என பிரதமா் நரேந்திர மோடி வா்ணித்தாா்.

இந்தச் சூழலில், இந்திய வெளியுறவு அமைச்சரின் பெல்ஜியம் பயணம், இருதரப்பு வியூக கூட்டுறவை மேலும் வலுப்படுத்தும்; மேற்காசிய போரால் எரிசக்தி விநியோக சங்கிலியில் எழுந்துள்ள தாக்கங்கள் குறித்தும் அவா் விவாதிப்பாா் என்று வெளியுறவு அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.