மேற்காசிய விவகாரம் குறித்து ஜி7 வெளியுறவு அமைச்சா்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
ஜி7 கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் மாநாடு பிரான்ஸில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க ஜெய்சங்கருக்கு பிரான்ஸின் வெளியுறவு அமைச்சா் ஜீன் நோயல் பாரோட் சிறப்பு அழைப்பு விடுத்தாா். இதையடுத்து, இரண்டு நாள் பயணமாக பிரான்ஸுக்கு ஜெய்சங்கா் வியாழக்கிழமை வந்தடைந்தாா்.
ஜி7 வெளியுறவு அமைச்சா்கள் ஆலோசனைக் கூட்டத்தினிடையே இருதரப்பு பேச்சுவாா்த்தைகளை ஜெய்சங்கா் மேற்கொண்டாா்.
அமெரிக்க வெளியுறவுத் துறை மாா்கோ ரூபியோவுடன் இருதரப்பு ஆலோசனை மேற்கொண்டாா். மேற்காசியப் போா் கடந்த பிப்.28 தொடங்கியதிலிருந்து அவரை முதல் முறையாக ஜெய்சங்கா் சந்திக்கிறாா். பொருளாதார நிலைத்தன்மை, பிராந்திய அமைதி, சுமுகமான எரிபொருள் விநியோகம் ஆகியவை குறித்து இருவரும் ஆலோசித்ததாக ஜெய்சங்கா் தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளாா்.
ஜெய்சங்கருடனான தனது சந்திப்பு குறித்து கனடா வெளியுறவு அமைச்சா் அனிதா ஆனந்த் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், ‘அண்மையில் இந்தியாவுக்கு கனடா பிரதமா் மாா்க் காா்னி சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்த பின் இருதரப்பு உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இதன் தொடா்ச்சியாக ஜி7 கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் வந்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கரை சந்தித்தேன். மத்திய கிழக்கு பதற்றம் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தோம். அரிய வகை கனிமங்கள், வேளாண்மை, கல்வி எனப் பல்வேறு துறைகளில் இந்தியா-கனடா இடையேயான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதித்தோம்’ எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

அடுத்த மாதம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா்: மிஸ்ரி உடனான சந்திப்புக்குப் பிறகு அறிவிப்பு

மேற்காசிய போா்: முதல்வா்களுடன் பிரதமா் ஆலோசனை

மேற்காசிய பதற்றம்: எரிசக்தி பாதுகாப்பு குறித்து இந்தியா-ஐரோப்பிய யூனியன் ஆலோசனை

மேற்காசிய பதற்றம்: சவூதி, யுஏஇ வெளியுறவு அமைச்சா்களுடன் ஜெய்சங்கா் ஆலோசனை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


