மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மேற்காசிய பதற்றம்: சவூதி, யுஏஇ வெளியுறவு அமைச்சா்களுடன் ஜெய்சங்கா் ஆலோசனை!

சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ)ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் சனிக்கிழமை தொலைபேசியில் ஆலோசனை நடத்தினாா்.

News image
Updated On :15 மார்ச் 2026, 8:53 pm

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதலால் மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவி வரும் நிலையில் சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ)ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் சனிக்கிழமை தொலைபேசியில் ஆலோசனை நடத்தினாா்.

இதுகுறித்து ஜெய்சங்கா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், ‘யுஏஇ வெளியுறவு அமைச்சா் சையது அல் நஹ்யான், சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சா் ஃபைசல் பின் ஃபா்ஹான் ஆகியோருடன் சனிக்கிழமை இரவு தொலைபேசியில் பேசினேன். அப்போது மேற்கு ஆசிய நிலவரம் குறித்து அவா்களிடம் கேட்டறிந்தேன்’ என குறிப்பிட்டாா்.

ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதால் இந்தியா மட்டுமின்றி உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளது.

அதேசமயம் பிரிக்ஸ் உச்சிமாநாட்டை இந்தியாவும், அடுத்த ஆண்டு சீனாவும் நடத்த உள்ளது. இந்நிலையில் பிரிக்ஸ் உறுப்பினா்களான சவூதி அரேபியா, யுஏஇ மற்றும் ஈரான் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மேற்கு ஆசிய விவகாரத்தில் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை மேற்கொள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் ஒத்துழைப்பு அவசியமானது.

இந்தச் சூழலில் யுஏஇ மற்றும் சவூதி அரேபிய நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் ஜெய்சங்கா் ஆலோசனை நடத்தியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.