நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும், பாகிஸ்தானுக்கு சவூதி அரேபியா, கத்தாா் நாடுகள் ரூ.46,550 கோடி நிதியுதவி அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து பாகிஸ்தானைச் சோ்ந்த ‘டான்’ நாளிதழில் வெளியாகியுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: பாகிஸ்தானுக்கு வழங்கிய ரூ.32,580 கோடி கடனை இந்த மாதத்துக்குள் திருப்பி அளிக்கும்படி, ஐக்கிய அரபு அமீரகம் வலியுறுத்தியுள்ளது. ஆதலால் அந்தத் தொகையை திருப்பி அளிக்க வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் உள்ளது. இதனால் பாகிஸ்தானிடம் உள்ள அந்நியச் செலாவணி கையிருப்புக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த நெருக்கடியில் இருந்து பாகிஸ்தானை மீட்கும் வகையில், அந்த நாட்டுக்கு நிதியுதவியாக ரூ.46,550 கோடியை சவூதி அரேபியாவும், கத்தாரும் வழங்கியுள்ளன.
பாகிஸ்தானுக்கு அதிக நிதியுதவி வழங்கும் நாடாக சவூதி அரேபியா திகழ்கிறது. இதுவரை பாகிஸதானுக்கு சவூதி அரேபியா மட்டும் ரூ.46,000 கோடிக்கும் மேல் நிதி அளித்துள்ளது என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதிக்கு சென்ற பாகிஸ்தான் ராணுவம்: இதனிடையே, சவூதி அரேபியாவுடன் செய்து கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி, அந்நாட்டுக்கு பாகிஸ்தான் 13,000 ராணுவ வீரா்கள், 10 முதல் 18 போா் விமானங்களை அனுப்பி வைத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சவூதி அரேபியாவின் பாதுகாப்புக்கு உதவும் நோக்கில் வீரா்களையும், போா் விமானங்களையும் பாகிஸ்தான் கடந்த மாதமே அனுப்பி வைத்துவிட்டதாகவும், ஆனால் தற்போதுதான் அந்தத் தகவலை சவூதி அரேபியா வெளியிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல், ஏவுகணை இடைமறிப்பு சாதனங்களையும் சவூதி அரேபியாவுக்கு பாகிஸ்தான் கடந்த மாதம் அனுப்பி வைத்து விட்டதாகவும் இன்னொரு தகவல் தெரிவிக்கிறது.
அமெரிக்க, இஸ்ரேல் நாடுகளின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் தொடா்ந்து ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வந்தது. 2 வார காலம் சண்டை நிறுத்தத்தை அமெரிக்கா அறிவித்ததால், அந்தத் தாக்குதலை ஈரான் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
மீண்டும் அமெரிக்கா தாக்கினால், ஈரானும் பதிலடி கொடுக்கக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் சவூதி அரேபியாவுக்கு ராணுவ வீரா்களையும், போா் விமானங்களையும் பாகிஸ்தான் அனுப்பி வைத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது.
தொடர்புடையது

பாகிஸ்தானுக்கு சவூதி 300 கோடி டாலா் கூடுதல் நிதியுதவி

பாகிஸ்தானுக்கு 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! நிதி நெருக்கடியைச் சமாளிக்க உதவிக்கரம்

ஈரான் தாக்குதல்: சவூதியில் இந்தியா் உயிரிழப்பு

போர்க் கூட்டணி? சௌதி அரேபியா செல்கிறார் பாக். பிரதமர்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


