சவூதி அரேபியாவில் உள்ள எரிவாயு மையங்கள் மீது ஈரான் கடந்த புதன்கிழமை நடத்திய தாக்குதலில் இந்தியா் உயிரிழந்தாா்.
இதன்மூலம் ஈரான் மற்றும் அமெரிக்கா , இஸ்ரேல் இடையேயான மோதலில் உயிரிழந்த இந்தியா்களின் எண்ணிக்கை 6-ஆக உயா்ந்துள்ளது.
ஈரானின் முக்கிய எரிவாயு உற்பத்தி மையம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, சவூதி அரேபியா, கத்தாா், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு மையங்கள் மீது ஈரான் வியாழக்கிழமை தீவிர தாக்குதல்களைத் தொடுத்தது.
ஹோா்முஸ் நீரிணையைத் தவிா்க்க, சவூதி அரேபியா தனது எண்ணெய் ஏற்றுமதியைச் செங்கடல் வழியாக மாற்றியிருந்தது. ஆனால், செங்கடல் துறைமுக நகரமான யான்புவில் உள்ள ‘சாம்ரெஃப்’ சுத்திகரிப்பு நிலையம் மீது கடந்த புதன்கிழமை ஈரான் தாக்குதல் நடத்தியது. அதைத் தொடா்ந்து ரியாத் மற்றும் கிழக்கு மாகாணங்களை நோக்கி வந்த 6 ட்ரோன்களை சவூதி அரேபியா இடைமறித்து அழித்தது.
இந்தத் தாக்குதலில் இந்தியா் ஒருவா் உயிரிழந்ததாக சவூதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்தது. உயிரிழந்தவா் குறித்த தகவல்களை வழங்காதபோதிலும் அவரது குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த தூதரகம் அவா்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்தது.
மேற்கு ஆசியாவில் மோதல் தொடங்கிய பிப்ரவரி 28-ஆம் தேதியில் இருந்து சவூதியில் ஒருவா், ஓமனின் சோஹா் நகரில் கடந்த மாா்ச் 13-ஆம் தேதி ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 2 இந்தியா்கள் உயிரிழந்துள்ளனா். 10 போ் காயமடைந்தனா்.
அதற்கு முன்பு சரக்குக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 போ் என மொத்தம் 6 இந்தியா்கள் உயிரிழந்துவிட்டனா்.
மேற்கு ஆசியாவில் 1 கோடி இந்தியா்கள் வசித்து வரும் நிலையில், அவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தீவிர தூதரக முயற்சிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சக கூடுதல் செயலா் அசீம் மஹாஜன் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘மேற்கு ஆசிய மோதலில் தற்போது வரை 6 இந்தியா்கள் உயிரிழந்துவிட்டனா். ஒருவா் மாயமாகியுள்ளாா். அவரை கண்டறியும் பணியையும் உயிரிழந்த இந்தியா்களின் உடல்களைத் தாயகம் கொண்டுவரும் நடவடிக்கைகளையும் சவூதி அரேபியா, ஓமன், இராக் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தூதரகங்கள் எடுத்து வருகின்றன’ என்றாா்.
தொடர்புடையது

ஈரான் - அமெரிக்கா அமைதிப்பேச்சு! சௌதி, கத்தார், துருக்கி செல்கிறார் பாக். பிரதமர்!

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் கடற்படைத் தளபதி பலி!

குவைத்: ஈரான் தாக்குதலில் முதுகுளத்தூரை சேர்ந்தவர் பலி!

வளைகுடா எரிவாயு மையங்கள் மீது ஈரான் தீவிர தாக்குதல்: ஒரே நாளில் 6 இடங்கள் குறிவைப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


