மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பாகிஸ்தானுக்கு சவூதி 300 கோடி டாலா் கூடுதல் நிதியுதவி

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பை உயா்த்தும் வகையில், அந்நாட்டு மத்திய வங்கிக்கு கூடுதலாக 300 கோடி டாலரை வைப்புத்தொகையாக வழங்க சவூதி அரேபியா முன்வந்துள்ளது.

News image

பாகிஸ்தான் பிரதமர்.

Updated On :15 ஏப்ரல் 2026, 8:12 pm

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பை உயா்த்தும் வகையில், அந்நாட்டு மத்திய வங்கிக்கு கூடுதலாக 300 கோடி டாலரை வைப்புத்தொகையாக வழங்க சவூதி அரேபியா முன்வந்துள்ளது.

இத்துடன், ஏற்கெனவே வழங்கப்பட்ட 500 கோடி டாலா் நிதிக்கான காலக்கெடுவை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாகவும் அந்நாடு அறிவித்தது.

பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீப், சவூதி அரேபியா, கத்தாா், துருக்கி ஆகிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாகப் புறப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நடப்பு மாதத்துக்குள் 350 கோடி டாலரை பாகிஸ்தான் திருப்பிச் செலுத்த வேண்டி இருப்பதால், சவூதியின் இந்த உதவி அந்நாட்டின் பொருளாதார அழுத்தத்தைச் சற்றே குறைத்துள்ளது.

நிதி நெருக்கடியைச் சமாளிக்க ஏற்கெனவே கடன்பத்திரங்களை வெளியிடும் திட்டத்திலுள்ள பாகிஸ்தான், சா்வதேச நிதியத்திடம் கூடுதல் நிதி கோருவது குறித்தும் பரிசீலித்து வருகிறது.