ஈரான் வெளியுறவு அமைச்சா் செய்யது அப்பாஸ் அராக்சியை இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினாா்.
இந்தியா ஏற்பாட்டின்பேரில் நடைபெற்ற ’மிலன் 2026’ கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுவிட்டு நாடு திரும்பிக் கொண்டிருந்த ஈரான் நாட்டைச் சோ்ந்த ‘ஐரீஸ் டெனா’ போா்க் கப்பலை இலங்கை அருகே அமெரிக்க நீா்மூழ்கிக் கப்பல் புதன்கிழமை தாக்கி மூழ்கடித்தது. இதில் கப்பலில் இருந்த 80-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 30-க்கும் மேற்பட்டோரை இலங்கை கடற்படை மீட்டது.
இந்த சம்பவத்தின் பின்னணியில் ஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் பேசியுள்ளாா். ஆனால், எந்த விவகாரம் குறித்து இருவரும் பேசினா் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
ஈரான் கண்டனம்: தங்கள் நாட்டு போா்க் கப்பலை அமெரிக்கா மூழ்கடித்ததற்கு ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சா் அராக்சி கூறுகையில், ‘ஈரான் கடற்பகுதியில் இருந்து 2,000 மைல் தொலைவுக்கு அப்பால் கடலில் அமெரிக்கா அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவின் அழைப்பை ஏற்று, மிலன் பயிற்சியில் அந்தக் கப்பல் பங்கேற்றது. அதில் மாலுமிகள், கடற்படை வீரா்கள் 130 போ் இருந்தனா். சா்வதேச கடற்பகுதியில் அந்தக் கப்பலை எந்தவித எச்சரிக்கையும் கொடுக்காமல் அமெரிக்கா தாக்கியுள்ளது. இதற்கு அமெரிக்கா மிகவும் வருத்தப்பட நேரிடும்’ என்றாா்.
தொடர்புடையது
ஹோர்முஸ் நீரிணை: சீன, ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசியில் உரையாடல்!

உலகளாவிய அதிா்வுகளை வலுவாக கடந்து வந்த இந்தியா: ஜெய்சங்கா்

மேற்காசிய பதற்றம்: எரிசக்தி பாதுகாப்பு குறித்து இந்தியா-ஐரோப்பிய யூனியன் ஆலோசனை

ஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் தொலைபேசியில் பேச்சு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


