கர்நாடகத்தில் பெங்களூரு-பல்லாரி நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதியதில் 3 காவல் துணை ஆய்வாளர்கள் பலியாகினர்.
கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்தில் பெங்களூரு-பல்லாரி நெடுஞ்சாலையில் பெங்களூருவிலிருந்து பல்லாரிக்கு ஐந்து துணை ஆய்வாளர்கள் காரில் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டனர். இந்த நிலையில் கார், பிரகாஷ் ஸ்பாஞ்ச் எஃகு நிறுவனம் அருகே காலை 7 மணியளவில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் மூன்று காவல் துணை ஆய்வாளர்கள் பலியாகினர். மேலும் இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர். உடனே அவர்கள் சித்ரதுர்காவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தாவணகேருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து மிகவும் கடுமையானதாக இருந்ததால், கார் கிட்டத்தட்ட 300 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து நடந்த உடனேயே காவல் கண்காணிப்பாளர் ரஞ்சித் குமார் பண்டாரு, ஹிரியூர் துணை காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் மற்றும் பிற மூத்த காவல் அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Three police sub-inspectors were killed and two others sustained serious injuries after their car crashed into a lorry on the Bengaluru-Ballari highway in Chitradurga district on Sunday morning, police said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ம.பி.யில் லாரி மோதி பழங்குடியினர் 5 பேர் பலி!

மணல் லாரி மீது சுற்றுலா வாகனம் மோதியதில் 16 போ் பலத்த காயம்

லாரி மோதியதில் நிதி நிறுவன துணை மேலாளா் உயிரிழப்பு

ஜார்க்கண்ட்: இருசக்கர வாகனம் - கார் மோதியதில் 4 சிறுவர்கள் பலி
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு



